பூணல்,பூணூல்,முப்புரி நூல் – பிண்ணனி

பூணலுக்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லை என்பது நம் இந்துக்களுக்கே தெரியவில்லை. எல்லா இந்துக்களும் அணியும் ஒன்றே. அந்தணர்கள் அந்த வழக்கத்தை விடவில்லை. மற்றையவர்களின் வாழ்வில் பழக்கம் குறைந்துவிட்டது. ஆனால் கருமாதி செய்யும் போது பூணல் அணியும் பழக்கம் எல்லா இந்து சமூகத்தினரிடமும் இன்றும் உண்டு. பெண்களும் பூணல் அணிந்த காலம் உண்டு. பூணல் அணிவதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று அறிவு சார்ந்த புலன்கள் அதாவது ஞானேந்திரியங்கள் (கண்,வாய்,காது,மூக்கு,தொட்டுணர்தல்) இவையனைத்தும் தலையில் அமைந்துள்ளன(தொட்டுணர்வு உடலெங்கும் உண்டு).பூணூலை இடது தோளிலிருந்து குறுக்காக இடும்போது நம் உடல் இரண்டு பகுதியாக பிரிக்கப்படுகிறது. ஒருபுறம் தலையும் வலதுகையும் – அறிவுபூர்வமான உறுப்புக்கள் . மறுபுறம் இதயம்,நுரையீரலின் ஒருபகுதி,வயிறு,இனப்பெருக்க உறுப்பு,மலவாய் . இவை கர்மேந்திரியங்கள்: அதாவது உண்டல்,செரித்தல்,மலம் கழித்தல்,கலவி போன்ற அறிவு சம்பந்தப்படாத செயல்களைக் குறிப்பன. இது முதல் காரணம். இரண்டாவது காரணம் ஒருவரின் வாழ்க்கைப் பொருப்பைக் குறிக்க. பூணூலை முப்புரி நூல் என்பதுண்டு. அதில் மூன்று தனி நூல்கள் உண்டு. திருமணம் ஆகும் முன் மூன்று நூல் . திருமணம் ஆனால் ஆறு நூல். தந்தை உயிர் தவறினால் ஒன்பது நூல். தாய் உயிர் தவறினால் 12 நூல். இந்த நூல்கள் பார்த்தே நாம் அவரின் குடும்பநிலையை அறிந்து கொள்ளலாம்! இதில் பார்ப்பனீயமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை! சில சமூகங்களில் இது வழக்கத்தில் இல்லை அவ்வளவே! யார் வேண்டுமானாலும் பூணூல் அணியலாம். மந்திரமும் சொல்லலாம். மூன்றாவது பயன். நமசிவாய ,சரவணபவ போன்ற மந்திரங்களை உருவேற்றும் போது பூணூலைப் பிடித்துக்கொண்டே சொல்லவேண்டும். இது உடலோடு இருப்பதால் ஒரு காப்பாக தாயத்தாக விளங்குகிறது! தீய சக்தியிலிருந்து காத்துக் கொள்ளத் தனியாக ஏதும் தாயத்துத் தேவையில்லை ! ரொம்ப நாளா எழுத நெனச்சேன்!

2 thoughts on “பூணல்,பூணூல்,முப்புரி நூல் – பிண்ணனி

  1. // யார் வேண்டுமானாலும் பூணூல் அணியலாம். மந்திரமும் சொல்லலாம். //

    மேற்சொன்ன வாக்கியத்திற்கு ‘சங்க இலக்கியங்கள்’ (அல்லது) ‘காப்பியங்களில்’ (அல்லது) ‘பிற்காலத்தில் கவிஞர்கள் பாடிய பாடல்களில்’ இருந்து ஏதேனும் ஆதார பாடல் தர முடியுமா ?

    தெரிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்

    • வேதங்களிலே இதற்கு ஆதாரம் உண்டு. தமிழிலும் நிறைய உண்டு . அவற்றை நான் தொகுத்ததில்லை.

Leave a comment