குழந்தை வளர்ப்பு

சரியான முறை தவறான முறை என்று ஒன்றும் இல்லை.

நம்முடைய குணாதிசயங்களை மரபணு மூலம் அவர்கள் பெற்றே பிறக்கிறார்கள்.

நம் நல்ல குணங்கள் தீய குணங்கள் அவர்களிடம் இருப்பதைக் காணலாம்.

அவற்றைக் கண்டு ஆதரித்து அல்லது களைந்து வழிப்படுத்துவது ஒன்றே நாம் செய்ய முடியும்.

எடுத்துக்காட்டாக சில குழந்தைகள் இரவில் கண் விழித்து படிப்பார்கள்.

அவர்களை காலையில்தான் எழுந்து படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

சில குழந்தைகள் காலை 5 மணிக்கு எழுந்துவிடும். ” படுத்துத் தொலை! சூரியன் மாதிரி எந்திரிக்கிறது!” என்று திட்டுபவர்கள் உண்டு.

நமக்குத் தெரிந்த நல்லவற்றை கடைப்பிடித்து முன்மாதிரியாக வாழ்ந்தால் நம்மை பின்பற்றத் தொடங்குவார்கள்.

உபதேசங்கள் வெறுப்பையே உருவாக்கும்.
#குழந்தைவளர்ப்பு

Leave a comment