மலம்!மும்மலம்!நிர்மலம்!

“மும்மலம் நீக்கு ! இறைவா !” என்றேன்.
“மீதியை என்ன செய்யப் போகிறாய் ?!” என்று சிரித்தான்.
“நிர்மலம் ஆக்கு!” என்றேன்.
“ஆகுக!” என்றான்.
“புரியவில்லை! ” என்றேன்.
“ஆக்கவும் நீக்கவும் நான் ஏன்?!
நிர்மலம் ஆகு!” என்றான்.
உட்கருத்து:
மும்மலம் மட்டும் இல்லை உன்னிடத்தில்.  பன்மலம் இருக்கிறது. நிர்மலம் ஆவதும் உன்கையிலேயே. உன்மலம் (உள் மலம் அதாவது உன் உள்ள மலம் )உனக்கே தெரியும்!