நான் அமர்ந்த மலர்களும்!சேகரித்த தேனும்!-4

பரமஹம்ச யோகானந்தர் ,யோகோதா ஸத்ஸங் சொஸைட்டி நிறுவுனர்.பாபா பட புகழ் மஹாவதார் பாபாஜி வழி வந்தவர். க்ரியா யோகத்தை உலகெங்கும் பரப்பியவர். இவர் விவேகானந்தரைப் போலவே ஆங்கிலக் கல்வி கற்றவர். அமெரிக்கா மற்றும் உலகெங்கும் விரும்பப்பட்டவர். இவர் எழுதிய Autobiography of a Yogi என்ற சுய சரிதம் நாத்திகர்கள் ஆத்திகர்கள் இருவரையும் ஈர்க்கும்! நிறைய அதிசய சம்பவங்கள்,மறு பிறப்பு உண்டா? குருநாதர் நினைத்தால் சீடனை எப்படியெல்லாம் காப்பாற்ற முடியும் என அறியலாம்! வாழ்க்கையில் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் இது! எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அவசியம் படியுங்கள். பல மதத்திற்கு அப்பாற்பட்ட கூற்றுக்கள் விளங்கும். தேடலில் நாம் நம்மை மதம் என்னும் கயிறால் கட்டிப்போடக்கூடாது! 
http://www.holybooks.com/…/Autobiography-of-a-Yogi-by-Param…

நான் கற்றவை எல்லாம் எழுதாவிட்டாலும் ஒரே ஒரு உபயோகமான தகவலை இங்கே பகிற விரும்புகிறேன்!

நோயில்லாமல் வாழ்வது எப்படி?
நமக்கு ஏற்படும் எல்லா தொற்றுநோய்களும் வாய்,தொண்டை மற்றும் மூக்கின் வழி பரவுகின்றன. நாம் தினந்தோறும் இளம் சூடான உப்பு நீர் கரைசலால் தொண்டையில் தேக்கி கொப்பளித்தால் மற்றும் உப்புத்தண்ணீரால்(சாதா உப்ப்பில் அயோடின்இருப்பதால் எரியும்! கடையில் கிடைக்கும் நேசல் ஸ்ப்ரே அல்லது ஸைனஸ் ரின்ஸ் உபயோகியுங்கள்!) மூக்கை சுத்தம் செய்தால் எந்த தொற்று நோயும் வராது. flu season ல் சோதித்துப் பாருங்கள்! இது உண்மை. மாசுபட்ட காற்று தெருவிலே நாம் தினமும் சுவாசிப்பதால் இதை தினமும் செய்து பலன் பெறுவோம்! ஆன்மீக குருக்கள் என்றால் ஆன்மிகம் மட்டும் கற்கவேண்டும் என்பதில்லை! (தொடரும்)