ப்ரபஞ்ச நியதியும் பழக்க வழக்கங்களும்

கண்ணன் உலகில் எதுவும் சும்மா இருப்பது இயலாத காரியம் என்கிறான்.

இயங்கிக் கொண்டே இருப்பதே ப்ரபஞ்ச நியதி.

அந்த இயக்கம் மூன்றுவித குணங்களுக்கு உட்பட்டது.

ஒன்று சாத்விகம் என்ற தன்னலமற்ற இயக்கம்.

ராஜஸம் என்ற தன்னலம் மிக்க இயக்கம்.

தாமஸம் என்ற தன்னலம் மற்றும் பொதுநலம் கருதாத இயக்கம்.

நம் மனம் இந்த மூன்று குணங்களுக்கும் மாறி மாறி உட்படும்.

அதனால் பொதுநலம் ,தன்னலம் மற்றும் எதற்கும் உதவாத அழிவுச் செயல்களில் ஈடுபடுகிறோம்.

எப்போது எந்த குணம் நம்மை ஆட்டி வைக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அதை அன்றாட பழக்க வழக்கம் என்ற ஆசாரம்( ஒழுக்கம்) என்ற பயிற்சியால் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

எடுத்துக்காட்டாக பெண்ணாக இருந்தால் காலை எழுந்து குளி,பரட்டைத் தலை ஊத்த வாயோடு சுற்றாதே,கோலம்போடு, இறை வணக்கம் செய்,வீட்டைத் தூய்மையாக வை என்றும் ஆணாக இருந்தால் காலை எழுந்து குளித்து இறைவணக்கம் செய்து தொழிலைத் தொடங்கு,நேரத்திற்கு வீட்டிற்கு வா,சம்பாதித்த பொருளை மனைவியிடம் கொடு,இறைவணக்கம் செய்,சேர்ந்து உணவு உண்,நேரத்தில் தூங்கு என்ற நியமங்களை உருவாக்கி நம் குணங்களை மாற்றி அமைக்க நம் மதத்தைக் கட்டமைத்தார்கள்.

அதை கடைப்பிடித்தால் வீடு பேறு தன்னால் கிடைக்கும் .

இல்லறமிக்க நல்லறமில்லை.
#ப்ரபஞ்சநியதியும்_பழக்கவழக்கங்களும்

இல்லறம் என்ற தேன் கூடு

கணவனோ மனைவியோ ஒருவர் மற்றவரை முதுமையில் இழந்தபின் ஒருவர் மற்றவரை செலுத்திய அன்பை அடிக்கடி நினைவு கூர்ந்து மற்றவர் உயிரோடு இருந்த போது வெளிக்காட்டாமல் இருந்துவிடுகின்றனர்.

அன்பை முகத்திற்கு முன் சொன்னால் முகத்துதியாகிவிடும்.

ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.

மேற்கத்திய வாழ்க்கை முறையில் தினமும் ஹனி ஸ்வீட் ஹார்ட் டார்லிங் ஐ லவ் யூ சொல்லி டைவர்ஸ் செய்வதைவிட இது புனிதமான அன்பு!

குறையில்லாத மனிதரே இல்லை. அமைந்த வாழ்க்கைத் துணையை வைத்து வாழ முயற்சிப்பதே நம் பண்பாடு.

அதில் ஆயிரம் குறை நிறை ஏற்றம் இறக்கம் கோபம் சோகம் சச்சரவுகள் வந்து போகலாம். குடும்பம் கரை சேர்ந்துவிடுகிறது.

மேற்கத்திய நாடுகளில் ஐ லவ் யூ சொல்லி பூச்செண்டு கொடுத்து குடும்பக் கப்பல் கவிழ்ந்துவிடுகிறது!

குறையற்ற தவ சீலர்கள் இல்லறத்தில் அரிது. அதனால் கணவன் மனைவி இவ்விருவரிடமும் குறை இருந்தே தீரும்.

இல்லறத் தேன்கூட்டில் ப்ரச்சனைகள் குறை நிறைகள் தேனீக்கள் போல மொய்த்தாலும் உண்மைக் காதல் என்ற தேனை உண்பவர்களே வெற்றியாளர்கள்.

#இல்லறம்என்றதேன்கூடு

இல்லறமும் துறவறமும்!

இல்லறமும் துறவறமும்!
=======================
இல்லறத்திலிருந்து மனதால் நற்சிந்தனை நற்சொல் நற்செயல் செய்பவன் மிகப் பெரிய ஞானி!

துறவு கணினியில் போர் விளையாட்டு போல!

இல்லறம் உண்மையான போர்!

அதனால் புண்படுகிறது.

அடி விழுகிறது.

இழப்பு ஏற்படுகிறது.

இறுதியில் மனதை வெல்லும் ஆற்றல் வருகிறது.

இல்லறம் மிக்க நல்லறமில்லை. இல்லறத்தைவிட பாதுகாப்பான மன முதிர்ச்சிக்கான சூழல் ஏதுமில்லை.

எடுத்துக்காட்டாக இல்லறத்தில் காமம் காப்பி சாப்பிடுவது போன்ற சாதாரண நிகழ்ச்சி!

ஆனால் துறவில் அது பெருங்குற்றம். காப்பி குடித்துவிட்டு அடுத்த வேலையில் இறங்கலாம்.

ஆனால் மனமுதிர்வில்லா பொறுப்பு துறத்தல் ( எஸ்கேப்பிஸம்) சார்ந்த துறவில் காமம் மனதில் எழுந்தால் வடிகால் இல்லை.

அசிங்கப்படுவதும் துறவிற்கு இழிவு சேர்ப்பதுமே நடக்கும் .

மெதுவாய் வளர்கிறோம்!

நிச்சயமாய் வளர்கிறோம்!
#இல்லறமும்துறவறமும்

குறுக்கு வழிகள் இல்லை! இல்லவே இல்லை!

(எச்சில் இலையில் உருளும் பக்தர்கள் காணொளிக்கு என் பின்னூட்டம்!)

நம் மனதிற்கு சில கருத்துக்கள் ஒத்து வரும். சில ஒத்து வராது. இதில் சாதி காரணமல்ல. வடநாட்டில் பக்தி அதிகம். தென்னாட்டில் பஜனை பக்தி கிடையாது. மந்திர ஜபம், பூஜை உண்டு! வடநாட்டு வழிமுறைகள் நம்மை முகம் சுழிக்கச் செய்யும்! நிறைய இப்படி வழக்கங்கள் உண்டு! யோனி பூஜை கூட உண்டு! விந்து வெளியிடாத உடலுறவு வகை வழிபாடும் உண்டு! அதாவது நம் இறுதி நோக்கம் உடல் மனம் சார்ந்த பிடிகளிலிருந்து விடுபட்டு ஆன்மாவில் ஒன்றும் அந்த நிலையில் இருப்பது! இந்த உடல் கர்மவினையால் நாம் பின்னிக் கொண்ட சட்டை என்ற நிலை அடைதல்! இதுவே முக்தி! மோக்ஷம்!

யோனி பூஜை செய்து யோனியை சக்தியாக வணங்கி பின் விந்து விழாத நிலையில் மனதை குவித்தல் ஒரு வழிமுறை! மிக மிகக் கடினமான முறை! உடலுறவின் உச்சத்தில் மனதை இழுத்துக் கட்டுவது மிக மிக மிக இருபாலாருக்கும் கடினம்! இதற்கு முன் பலப்பல வழிபாடு சிந்தனை செயல் என மனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்கள் மட்டுமே இந்த யோகப் பயிற்சியில் இறங்க முடியும்!

இப்படி விந்துவிழாத உடல் உறவை வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு! அவர்களுக்கு “ஊர்த்வ ரேதஸ், அதாவது விந்து மேல்நோக்கிய ஓட்டம் “ உள்ளவர்கள் என்ற பெயர். இதில் காமம் சார்ந்த கலவியே நம் கண்ணில் படும்! கண்ணபிரானுக்கு ஊர்த்வ ரேதஸ் என்ற பெருமை உண்டு! அது இந்துக்களுக்கு தெரியாது! நமக்கு சாதி பஞ்சாயத்திலேயே பொழுது போகிறது! அவதாரங்கள் பலவற்றை நடைமுறையில் செய்து காட்டியவர்கள்!

ஆனால் இப்படி பல ஆயிரம் ஊர்த்வ ரேதஸ்கள் யோகிகள் இருந்தார்கள்! இன்றும் உண்டு! இதையாரும் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை! விவரம் தெரியாத நாம் தான் அறிவிலிகள்! இவற்றை என் பதின்ம வயதில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் படித்த போது ஆச்சரியமாக இருந்தது! “இல்லறத்தில் இருந்தே இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க முடியும்! ஆனால் கணவன் மனைவி இருவருக்குமே ஆங்கிலக் கல்வியால் காமத்தைத் தவிர ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது!” இதுதான் நிலை!

எச்சில் இலையில் உருள்வதால் தோல் வியாதிகள் குணமானவர்கள் உண்டு! சொன்னால் நம்ப முடியாது . நீங்களே தேடி கண்டு கொள்ளுங்கள்!

எச்சில் இலையில் உருள்வதால் ஈகோ குறைதல், பல பிறப்புகளில் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் ( தனியாக தீச்சட்டி, அலகு குத்தல்,மண் சோறு…… பற்றி பார்ப்போம்), உண்மையான இறை அனுபவத்தில் மூழ்கிய பக்தர்களின் அடிப்பொடி ( அடியார்க்கு அடியேன் என்ற கருத்து) என்பதை ஏற்றல் என்ற பல கோணங்கள் உண்டு!

இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இவை சரியா தவறா என விவாதிக்க அல்ல! இப்படி நாம் அறியாத பல கோணங்கள் உண்டு என்பதை சுட்டிக் காட்டவே!

(இதனால் எனக்குக் கிடைப்பது ஒரு பயனும் இல்லை.

நமக்குத் தெரிந்ததை பகிராமல் இருப்பது தவறு என்ற ஒரே எண்ணத்தால் பொன்னான நேரத்தை இதை எழுதி செலவிடுகிறேன்!)

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

உணர விரித்துரையா தார்

ஆதிசங்கரர் இவற்றையெல்லாம் நீக்கி கணபதி,சிவன்,சக்தி,விஷ்ணு,முருகன்,ஆதித்தன் என வழிபாடுகளை மட்டும் நிலைநிறுத்தினார்! ஆனால் மற்ற வழிபாடுகள் தலை தூக்கத் தொடங்கிவிட்டன! மக்கள் குறுக்கு வழிகளில் புண்ணியம் தேடத் தயார்! நேர்வழி செல்ல விரும்புவதில்லை!

இது எல்லா மதத்தவர்களுக்கும் பொருந்தும்!

இயேசு சொன்னதை கடைப்பிடிப்பதைவிட மதமாற்ற ஊழியம் செய்வது எளிது என்ற அநேக கிறித்தவர்கள் உண்டு!

நபி வழி நடப்பதைவிட “ஃபத்வா கொடுக்கிறேன் அவரைக்

கொன்றுவிட்டு வா!” என்பதைக் கடைப்பிடிப்பது எளிது என்ற இஸ்லாமியர் உண்டு!

புத்தரின் அஹிம்ஸையைக் கடைப்பிடிப்பதைவிட தேரர் சொல்லும் நபரை போட்டுத் தள்ளுவது எளிது என நினைக்கும் பௌத்தர்கள் பல ஆயிரம்!

மக்களே முக்தி ,நிர்வாணம்,சுவனம்,பரலோகத்தில் உள்ள பிதா இவற்றில் எதற்கும் குறுக்கு வழி இல்லை!

பீ கேர் ஃபுல்! நான் என்னச் சொன்னேன்!

இல்லறம் போற்றுவோம்!

முருகா! எனும் போதே முன்னூறு ப்ரச்சனைகள் நம் கதவைத் தட்டும்! துறவிக்கு இது இல்லை!