குடுமி வைத்தவர்கள்

பலரும் குடுமி வைத்த அந்தணர் கோவிலில் பூஜை செய்யும் அந்தணர் வேதம் ஓதும் அந்தணர் என்றால் ஒரு இளக்காரம் .
அவர்களது பின்னணியை அறிந்தால் அவர்கள் சாதாரணர்கள் அல்ல என்பதை உணர்வீர்கள்.

கிட்டத்தட்ட 70-75 வருடங்களாக காஞ்சி மஹாப் பெரியவர் வேண்டு கோளுக்கு இணங்க அந்தணக் குடும்பங்களில் ஒரு மகனை வேதத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அந்தணக் குடும்பங்களால் வேதத்திற்கு அர்ப்பணிக்கப் பட்டவர்கள்.

அவர்களது குடும்பங்களில் மற்ற ஆண்கள் மிகப் பெரிய பதவிகளில், ஐஏஎஸ்,ஐபிஎஸ்,டாக்டர்கள்,இஞ்சினியர்கள்,CEOக்கள்,…… இருப்பார்கள்.

அதனால் உருவு கண்டு எள்ளாமை வேண்டும். அரசியலுக்காக அவர்களின் பொருளாதார சுகங்களை விட்ட தியாகத்தை இழிவாகப் பேசலாம். ஆனால் அது பண்பு இல்லை.

சீக்கியர்கள் உருவானது ஒவ்வொரு இந்துக் குடும்பமும் தலை மகனை இந்துமதம் காக்க அர்ப்பணிக்கப் பட்டதாலேயே. மற்றவர்கள் அனைவரும் சாதாரண இந்துக்கள் அணியும் உடைகள் பழக்க வழக்கங்கள் உடையவர்களே. இதைத் தனிப் பதிவாக பார்ப்போம்!

தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் இன்றைய காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் இருவரும் காஞ்சி மஹாப் பெரியவரின் வேண்டுகோளுக்கு பணிந்து அவரவர் பெற்றோரால் வேதப்பணிக்கு அர்ப்பணம் செய்யப் பட்டவர்களே!

மேலும் இந்துக்கள் அனைவரும் குடுமி வைத்திருந்தவர்களே!

பூணல் ஒழுக்கம்,அறிவைக் குறிக்கும். குடுமி ஞானத்தைக் குறிக்கும் – திரு மூலர்

நம் தலையாய மதமாற்றம் சனாதனம் ஒழிக்கும் முயற்சிகள் தொடர்க. ஆனால் யாரைப் பற்றி என்ன பேசுகிறோம் என்ற அடிப்படை அறிவு முக்கியம்!

#அந்தணர்கள்

இந்துக்கள் செய்ய வேண்டியது என்ன?!

இந்துக்கள் செய்ய வேண்டியது என்ன?!

===========================

How should Hindus conduct themselves?!

============================

Few weeks back I made a comment that Hindus are the reason why the Hinduism is on the decline! A friend of mine Durai Singam Chef suggested that I should write about how we can remedy this. I am writing this in response to that.

ஒருமுறை இந்துமதம் சீர்கெட இந்துக்களே காரணம் என கடுமையான கருத்தைச் சொன்னேன்! நண்பர் Durai Singam Chef “ நாம் எப்படி நம்மை சீர்திருத்திக் கொள்ளவேண்டும் என்பதைச் சொன்னால் நாம் நம்மை மாற்றிக் கொள்ள வசதியாக இருக்குமே! “ என கருத்திட்டிருந்தார்.

நல்ல கருத்து.அதை கருத்தில் கொண்டு

என் சிற்றறிவிற்கெட்டிய சில கருத்துகளை இங்கே தருகிறேன் !

1. இந்துமதம் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல! அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது!

Hinduism is not a faith ; it is a divine experience!

2. இந்து மதம் இறைநம்பிக்கையை எதிர்பார்க்கவில்லை! இறை அனுபவத்தைக் கொடுப்பது!

Hinduism does not require belief or faith in God ! It shows the way to experience God by yourself!

3. இறைவனை அருவமாகவும் உணரலாம்! நம்மைப்போல கை கால் கொண்ட உருவத்திலும் தியான ஸ்லோகங்களில் குறிப்பிடப்பட்ட வடிவங்களில் காணலாம்!

God can be experienced as formless and in form as we see in statues and pictures drawn according to dhyana slokas!

4.உருவக வழிபாடுகள் நம்மேல் உள்ள கருணையால் மகான்களால் உருவாக்கப்பட்டவை! அதை எண்ணி பெருமை கொள்ளுங்கள் ! தலை குனிவாக எண்ணாதீர்கள் !

All worship of God in form and rituals were created by Rishis,yogis and saints for making it easy for us to comprehend God in a form which we are comfortable with! Never be apologetic for worshipping God in form but be proud!

5. சாதிகள் உயர்வு தாழ்வு கற்பிக்க உருவாக்கப்படவில்லை! எந்த வேதத்தில் தேடினாலும் உயர்வு தாழ்வைக் காணமுடியாது! ஆனால் திரித்து பொருள் கொள்வது எளிது! அழியக்கூடிய பணம், பட்டம்,பதவி, சமூக அந்தஸ்து பெற அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்!அந்த குதர்க்க வாதிகளை சட்டை செய்யாதீர்கள் !

Varnashrama was not created to impose superior or inferior status on anyone! You wont see any such discriminating reference in any Veda! Yes it is possible to twist the facts with limited knowledge and with a goal to covet power, wealth, status and other ephemeral things! Ignore such people!

6. சாதியை மதியுங்கள்! உயர்வு தாழ்வு பாராட்டாதீர்கள் !

Respect varnashrama! Never discriminate based on caste!

7. சாதி பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முன்னோர்கள் ஆய்ந்து அறிந்து உணர்ந்து உருவாக்கிய சமுதாயம் போட்டி பொறாமையின்றி வாழ்ந்து அவரவர் கடமையைச் செய்து இறைநிலை பெற உருவாக்கப்பட்ட கட்டமைப்பு!

Varnashrama is a systematic method perfected to promote a peaceful coexistence without any overlap or competition among the population with a goal of God realisation !

8. சாதி மாற்றி திருமணம் செய்யாதீர்கள்!முன்னோர்கள் கண்ட வழிமுறைகளை நம் அறிவீனத்தால் குலைத்துவிடவேண்டாம்!

Do not marry outside of your caste!

Let us not undo the most scientifically advanced practical genetic makeup of our society which was meticulously and painstakingly preserved for thousands of years by our ignorance!

9. மதம் மாற்றாதீர்கள் ! மதம் மாற்றாதீர்கள் !

மதமாற்றம் இறைவனுக்கு எதிரான செயல்!

உங்களுக்கு எந்த மதம் என அவன் விதித்தான்! நம்புங்கள் ! அவன் உங்களைவிட புத்திசாலி!

Don’t convert to other religions!

Do not convert others to Hinduism!

Conversion is a crime against God! God made the choice of your religion and he knows better!

10. இந்துமதம் உயர்ந்தது என்று ஒரு போதும் வாதிடாதீர்கள்! நேரத்தை வாதங்களில் செலவிடாமல் “ உலகே ஒரு குடும்பம் !” என்ற கோட்பாட்டின் படி வாழும் உண்மையான இந்துவாக வாழுங்கள்!

Never try to establish that Hinduism is the best! Do not waste your time but be a real Hindu who believes that the whole world is a family!

(தொடரும்)

பி.கு.

மேற்கண்ட ஒவ்வொன்றும் ஒரு தலைப்பாக விளக்கப்பட வேண்டியவை! இல்லையென்றால் குழப்பம் ஏற்படும்! இறையருளால் அதைச் செய்ய சித்தம்!