இந்துமத அடிப்படைக் கோட்ப்பாடுகள்!

ப்ரஞ்ஞானம் ப்ரம்ம – தெளிந்த ஞானமே பரம்பொருள் ; ரிக் வேதம்

தத் த்வம் அஸி – இறைவனும் நீயும் ஒன்று; சாம வேதம்

அஹம் ப்ரம்மாஸ்மி – நான் பரம்பொருள் ; யஜூர் வேதம்

அயம் ஆத்மா பிரம்ம:- இந்த ஆத்மா பரம்பொருள் ;அதர்வண வேதம்

இது இறுதி நிலை.

இதில் எங்குமே உருவம்,பிள்ளையார்,முருகன்,…. சொல்லவில்லை. 
சாதி சொல்லவில்லை.
சாதிகூட  உயர்வு தாழ்விற்காக எந்த வேதத்திலும் சொல்லவில்லை.
சூத்திரர்கள் காலிலிருந்து தோன்றினார்கள் என்று உடல்வலிமையைக் குறிக்க உருவகப் படுத்தப்பட்டது!
பல இடங்களில் விஷ்ணு காலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதனால் விஷ்ணு இழிவானவர் என்றா பொருள்?!   இது இந்துக்களுக்கே தெரியாது.

உருவக வழிபாடு!

உருவக வழிபாடு  உருவ வழிபாடாய் ஆன கதை. எங்குமிருக்கும் இறையாற்றலை பிள்ளையார் சிவன் … என உருவகப்படுத்தி வழிபட்டு பின் மனம் ஒடுங்கி நிலையாமை உணர்ந்து தானும் இறைவனும் ஒன்றே என உணரும்போது உருவங்கள் உருவகங்கள் தேவையற்றுப் போகின்றன!
பத்து வயது வரை உள்ள கிறிஸ்மஸ் தாத்தா 13 வயதில் இல்லாமல் போகிறார்! ஒருவயதுப் பிள்ளைக்கு கிறிஸ்மஸ் தாத்தா கிடையாது! ஐந்தாம் வயதில் கிறிஸ்மஸ் தாத்தா இல்லை என்றால் கதறி அழும்!
13 வயதில் கிறிஸ்மஸ் தாத்தா என்று சொன்னால் ” நம்மை லூஸாப்பா?!” என்று கேட்க்கும்.

இந்துமதம் preKG to Post graduate/PhD வரை மன வெளியில் பயணிக்க உருவத்திலிருந்து அருவத்தை நோக்கிப் படிப்படியாக பல பிறவிகளில் நம்மைத் தயார் செய்து அழைத்துச் செல்கிறது.

புத்த சமண மதங்கள் அழிந்ததன் காரணம் எடுத்த எடுப்பில் அருவமும் எடுத்த எடுப்பில் சந்யாஸம் என்றது தான்!
இந்து மதம் அறம்,பொருள்,இன்பம்,வீடு என படிப்படியாக முன்னேறச் சொல்கிறது! ஆங்கிலேயன் எவ்வளவு முயன்றும் இந்துமதம் அழியாமல் இருப்பதன் காரணம் வற்புறுத்தல்கள் திணித்தல்கள் இல்லாததால் தான்.
முன்னேறு உன்னுடைய முயற்சியில்! உன்னுடைய கால அட்டவணைப்படி!
Progress by your own effort at your own pace! – This is Hinduism

படிப்படியாக சொந்த அனுபவத்தால் வருவது ஞானம்! இதில் வற்புறுத்தல் விளங்காததைத் திணித்தல் நிலைக்காது!

பெரியோர்! சான்றோர்!

இடித்துரைக்கும்,இனிதே உரைக்கும் சான்றோரில்லாவிடில் வாழ்க்கை தோட்டக்காரன் இல்லாத தோட்டமாகப் போய்விடும்! வெட்டும் போது வலித்தாலும் வெட்டப்படுவது ஈகோ என்ற தன்னுணர்வே என அறிக!
சான்றோர் – Role model
பெரியோர் – பெரிய கருத்துக்களைச் சுருங்கக் கூறியோ,தம் செயல்வழியோ காட்டும் சான்றோர்

முகநூலின் பயன்!

நம்மைச் சுற்றிப் பெரியவர்கள் என்றே இல்லாத குறை முகநூலில் தீர்கிறது! நிறைய கற்க நல்ல மாற்றம் நம்மில் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு! நம்மில் பெரியவர்கள் சுத்தமாக வாழ்க்கை அடித்துத் துவைத்த வேட்டி! கறைபடியாமல் வாழ்வதெப்படி எனக் கூற அவர்களே தகுதியானவர்கள். சிரந்தாழ்த்தி பெரியவர் மொழி செவிமடுத்துச் செம்மையுறுவோம்!
” அந்த அய்யாவக் கேளு இந்த அம்மாவக் கேளு ஆளுக் கொண்ணு(அறிவுரை) கொடுப்பாங்க!” – நல்லநேரம் திரைப் பாடல் வரிகள்.

கொடு(டி)மை

கொடிகட்டிப் பறந்த காலத்தில்
என்கொடி உலகோர்க்குத் தெரிவதில்லை!
கொடி அறுந்த பின்பு
கூடிவந்து விசாரிக்கிறார்கள்!
இது மேலான நோக்கின்மையின்
அழகான செய்முறை விளக்கம்!
மேல் நோக்குவோம்!

கண்ணாடித் துண்டு!

உலகளாவிய பேரறிவு சூரியன்.
நம் மனம் சிறு கண்ணாடித் துண்டு.
அதன் எதிரொளிப்பை மற்றவர் கண்கூசப்(முட்டாள் என்று மற்றவரை நிரூபிக்க ,அடித்துப் பேசி,குதர்க்க வாதம் செய்ய) பயன்படுத்தாமல் மன இருள் நீக்க உள் நோக்கித் திருப்பவேண்டும்!

கர்மவினை!

உடல் படைத்த அனைவருக்கும் நோய் பற்றும். மூப்பு வரும். மரணம் வரும். ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திப் பார்ப்பது மனம். அண்ணாவிற்கும் புற்றுநோய்! ரமண மகரிஷிக்கும் புற்று நோய்! நாம் உடல் சார்ந்த இன்ப துன்பங்களைப் பெரிது படுத்துகிறோம். விவேகானந்தர் பல வியாதிகளுக்கு உள்ளானார். செயல் திறன் உடையவர். பெரியார் பிள்ளையாரை எதிர்த்ததால் நோய்வாய்ப் பட்டார் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அவரும் பல நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றார். அண்ணா இரமணரின் புற்றுநோயைக் கிண்டல் செய்தார். அதனால் புற்றுநோய் வந்தது என்போர் உண்டு. உலகில் பல கருத்துக்களை நம் மனம் தொடர்பு படுத்திப் பார்த்து முடிவிற்கு வருகிறது.  அவ்வளவே! இறை மறுப்பும் இறை பக்தியும் தவறல்ல. நம் மனம் ஒப்பியதை பின்பற்றுவோம். தெளிவுறுவோம்! அறிவின் வெளிப்பாடு மனவெளியில் பயணித்தல்!

வானவில்-4

ஆன்மீகம்
(11.24.2017)
இதுவரை நாம் அறிந்தது:

1.ஆன்மீகம் என்பது உடலெடுத்த அனைவருக்கும் தொடர்புடையது.
2.மதங்களைக் கடந்தது
3.ஆன்மீகத்தைப் பயணமாகக் கொண்டால்
நம் மனத்திற்குப் புரியும்படி மலையேறுவது,கடலைக் கடப்பது,… என உருவகித்துக் கொள்ளலாம்.இது ஒரு உருவகமே அன்றி உண்மையல்ல!
4.மலையேற்றம் என்ற உருவகத்தைக் கொண்டால் இல்லறத்தை யானைப்பாதை ,படிகள் கொண்ட பாதையெனவும், துறவறத்தை மலைப்பாதைப் பயணமாகவும் உருவகித்தோம். இதில் மனிதப்பிறவியை ஒரு விபத்து என்றும் ஆன்மா என்ற ஒன்று இல்லை . இருக்கும் வாழ்க்கையை அனுபவி என்போரை, மலையேறும் அவசியமில்லை என அடிவாரத்தில் வாழ்வோராகவும் உருவகிக்கலாம்.
5. மலையேறி மற்றவரையும் ஏற்ற உதவுவோரை மகான்கள் என்ற அடைமொழியாலும் அழைக்கிறோம்.

மேலும்:

ஒரு பயணம் என்றால் அதற்கென்று ஒரு திட்டம்,எவ்வழி செல்கிறோம்,எதையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற திட்டம் வேண்டும்.
ஒன்று துறவற வழி மற்றொன்று இல்லறம் எனக் கொள்ளலாம். இரண்டு பயணங்களின் பாதைகளும் வேறு. இலட்சியம் ஒன்றே!

துறவறத்திலும் இருவகை உண்டு. ஒன்று அஷ்டாங்க யோகத்தை முழு நேரமும் பயின்று படிப்படியாக துறவறத்தில் ஈடுபட்டு நிலைத்த தியானநிலையில் தன்னை இடைவிடாது நிறுத்தி 10-20 ஆண்டு முயன்று தன்னைத் திருத்தி,தான் கடவுள் என்ற நிலையை அன்றாட வேலைகளுக்கும் நடுவில் உணர்ந்த ஜீவன் முக்தர்களாய் தான் எண்ணிய போது உடலை உதறிப் பின் பிறவாது ஒளியுருவாய் நீடிப்போர் ஒருவகை.
முன் பிறவியில் அஷ்டாங்க யோகம் கடைப்பிடித்து முதிர்ச்சி அடைந்து முக்தி அதாவது தான் கடவுள் என்ற நிலை எய்தும் முன் இறந்து போய் இப்பிறவியில் மிக இளவயதில் ஞானமார்க்கம் அடைவோர் இரண்டாம் வகை(இரமணர். எந்தக் கடவுளையும் வழிபடாமல் நான் யார் என்ற கேள்விக்கு விடை கண்டார். யோகப் பயிற்சி முன் பிறவியில் முடிந்ததால் பலரும் “நான் யார் ? என்று கேட்டால் முக்தி பெறலாம் என முட்டாள்த்தனமாக நினைக்கிறார்கள்! ஆன்மீகத்தில் குறுக்கு வழிகள் கிடையாது!)
(தொடரும்)

பார்ட்டி !

எங்கள் பக்கத்து வீட்டில் வியாழக்கிழமை இரவிலிருந்து திங்கள் அதிகாலை வரை பார்ட்டி கூச்சல் கூத்து மிக இரைச்சலுடன் ஒவ்வொரு வாரமும் தொடரும்.
மற்ற வீட்டுக் காரர்கள் ” உங்களுக்குத் தொந்தரவாக இல்லையா?!” என்று கேட்ப்பார்கள்.
” எனக்கு இவ்வளவு சந்தோஷமாக இருக்க வாழ்க்கையில் காரணங்களில்லை! அவர்களுக்கு சந்தோஷமாக இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. மகிழ்ச்சி! அவர்கள் சந்தோஷத்தைக் கெடுப்பானேன்?
உடல் வருந்தி உழைக்கும் எனக்கு கண் மூடினால் உறக்கம்! அது போதும்!” என்பேன்.