தந்தைவழி தாய்வழி மூதாதையர்கள் தர்ப்பணம்

ஆண் மூதாதையர் மற்றும் பெண் மூதாதையருக்கும் சரிசமமாக தர்ப்பணம் செய்யப்படுகிறது.
1. தந்தை,அவரது தந்தை,தந்தையின் தாத்தா
2.(தாய் இருந்தால்) தந்தையின் தாய்,தந்தையின் பாட்டி,தந்தையின் பாட்டியின் தாய்
3. தாயின் தாய் தந்தையர்,தாயின் தாத்தா பாட்டி, தாயின் தாத்தா பாட்டியின் தந்தை தாய்
என்று இருவழிகளிலும் உள்ள ஆண் பெண் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தரப்படுகிறது.

மேலும் இரண்டு வழிகளிலும் நாம் அறிந்தும் அறியாத மூதாதையர்களுக்கும் தர்ப்பணம் தரப்படுகிறது.

மேலும் அநாதைகளாக இறந்தவர்கள் யாராக இருந்தாலும்( சாதி மத இன குல வேறுபாடின்றி) அவர்களுக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது.

எடுத்துக்காட்டாக நீங்கள் தர்ப்பணம் செய்யும் இடத்தில் பலரும் அறியாமல் நிம்மதி அடையாத ஆன்மாக்களுக்கும் இருக்கலாம். அவற்றிற்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதனால் பலருக்கும் ஏற்படும் ஆவிகள் சம்பந்தமான சிக்கல்கள் நீங்குகின்றன.

இது மஹாலயம் தவிர்த்து 80 தர்ப்பணங்களில் கடைப்பிடிக்கும் முறை.

மேலும் சிறப்பான வருடத்தில் 16 நாட்களான மஹாலய பட்சத்தில் ( மஹாலயம் – அனைத்து மூதாதையரும் நம் வீடு வந்து சேரும் நாள் பக்ஷம்- பதினைந்து நாள்) மேற்சொன்ன அனைவருக்கும் மற்றும் மற்ற இரத்த உறவுகள் மற்றும் சம்பந்தம் செய்த குடும்ப உறவுகள் நண்பர்கள் ஆசிரியர் நம் வாழ்வில் ஒளியேற்றியவர்கள்,….. மற்றும் நாம் அறிந்தும் அறியாத உறவுகள் உறவுகள் அற்ற அநாதைகள் போன்றோருக்கு தர்ப்பணம் செய்யப்படுகிறது.

தானம்,கொடை,ஈகை

ஆங்கிலக் கலாச்சாரம் கிழக்கிந்தியக் கம்பெனி வடிவில் விற்பனை லாபம் கொள்ளை லாபம் சுரண்டல் வரி வசூல் கிஸ்தி …. என்ற மந்திரங்களை 200 வருடங்கள் ஓதிச் சென்றதன் பலன் நாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காத்த பண்பாடு பல்லிளித்துவிட்டது. மீள முடியவில்லை.

அது நம் குணமாகவே மாறிவிட்டது. செய்யும் கொஞ்சநஞ்ச தானமும் பெயர் புகழுக்காகவோ புண்ணியம் வேண்டியோ பாவம் தொலைக்கவோ செய்யப்படுகிறது.

எல்லா உயிரிலும் இறைவனிருக்கிறான்.

எல்லா உயிருக்கும் உணவு இயங்கு சக்தி.

அதை எந்த நோக்கமும் இன்றி பகிரவேண்டும்.

சொர்க்கத்தில் இடம் பிடிக்க பாவத்தைக் கழுவ அன்னதானமாகச் செய்யும் நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே!

பயன்தூக்கார் செய்த உதவி நயந்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.

#தானம்கொடைஈகை