மகளிடம் கேட்ட ஆலோசனை!

என் மகளிடம் ” எனக்கு முக்கியமான ப்ரச்சனை! உன் ஆலோசனை தேவை!” என்றேன்.
“ஓகே! அப்பா!” என்றாள்.
“என் மகள் தட்டில் உள்ள உணவையும் குவளையில் உள்ள பாலையும் குடிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறாள். அங்கு இங்கு வேடிக்கை பார்க்கிறாள். இந்தப் ப்ரச்சனையை எப்படி சரி செய்வது?
எனக்கு கோபப்பட ,திட்ட மற்றும் அடிக்கப் பிடிக்காது. பேசாமல் இருக்க முடியும்.  இதற்கு உன் ஆலோசனை என்ன?!” என்றேன்.
உடனே உணவையும் உண்டு பாலையும் குடித்துவிட்டாள்.தீர்வு தெரியாமல் திக்குமுக்காடுவதைவிட  ப்ரச்சனையை சரி செய்துவிடலாம் என யோசித்தாளோ?!😀

Molecular formula of thoughts!

Desire is Oxygen.
Love is Hydrogen.
Hatred Hydrogen.

When love and hatred attach to desire a thought is formed like a water drop. All thoughts together form the lake of mind. The worldly phenomenon is just an illusory reflection in mind and is always turbulent.  The daily happenings of life is the wind that keeps our mind shaking and restless!

No desire! No mind ! No turbulence!

கண்ணீர்!

நாம் அனைவரும் அன்பின் உறைவிடம்! நம் அன்றாட ப்ரச்சனைகள் நம் மனதை பனிக்கட்டியாக மாற்றிவிடுகின்றன! பிறர் துயரம் காணும்போது நம் மனம் என்ற பனிக்கட்டி உருகி ஓடத் தொடங்குகிறது!
ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்-குறள்
அன்பை எந்தக் கொம்பனாலும் மறைக்க முடியாது! கண்ணில் நீர் கோர்த்துவிடும். நாம் கடவுளின் பிம்பங்கள்! நமக்கு அன்பாக நடக்க முயற்சி தேவை இல்லை. கொடுமையாக நடக்க மனப்பயிற்சி தேவை!

எண்ணங்களின் மூலக்கூறு வாய்ப்பாடு!(மாலிக்யூலர் ஃபார்முலா!)

ஆசை-ஆக்ஸிஜன்
விருப்பு-ஹைட்ரஜன்
வெறுப்பு-ஹைட்ரஜன்

ஆசை,விருப்பு,வெறுப்பு இணைந்து உருவாவது எண்ணம் என்ற நீர்.
எண்ணங்கள் துளித்துளியாக சேர்ந்து உருவாவது மனம் என்ற குளம். உலகம் என்பது மனதில் அதாவது குளத்தில் ஏற்படும் பிம்பமே! அலைபாய்ந்த குளம் போலவே தத்தளித்துக் கொண்டும் மாறிக் கொண்டே இருக்கும்.

நாம் கடவுள்!

த்வைதம்,விசிஷ்டாத்வைதம் மனம் என்ற ஒன்று தனித்து உணரப்படும்போது ஏற்படும் காட்சிப் பிழைகள். அத்வைதம் மனம் அழிந்த உண்மை நிலையில் நாம் கடவுள் என உணர்தல்.
தண்ணீரில் முக்கிய குச்சி வளைந்ததாகத் தெரிவதும் குட்டையாகத் தெரிவதைப் போன்ற காட்சிப்பிழை! வெளியில் எடுத்தால் குச்சியின் நீளம் ஒரு இம்மி கூட மாறுவதில்லை. தண்ணீரின் ஒளி முறிவு எண் refractive index காற்றைவிட அதிகமாவதால் இந்த காட்சிப்பிழை ஏற்படுகிறது. மனம் அழியும் வரை இறைவன்-பக்தன் என இரட்டை நிலை! மனம் அழிந்தால் இறைவனே மிச்சம். இறைவன்-பக்தன் கிடையாது. மனம் நம் எண்ணங்களின் கோர்வை. எண்ணங்கள் ஆசை வெறுப்பால் வருபவை. ஆசை தொலைந்தால் மனம் இல்லை. நாம் கடவுள் என்ற நிலை. பிறப்பிறப்பு இல்லை.

குச்சி என் குரு!

நீச்சல் குளத்தில் ஒரு நீளமான குச்சியை வைத்தால் அது வளைந்தும் குட்டையாகவும் தெரியும். அப்படியே தண்ணீரை வற்றச் செய்தால் குச்சி அதே அளவு நீளமாகவும் வளைவின்றி நேராகவும் இருப்பதைக் காணலாம். ரமணர்,காஞ்சிப் பெரியவர்,….போன்ற மகான்கள் குச்சியை வெளியே எடுத்துப் பார்த்துவிட்டு குச்சி மாறுபடாததை உணர்ந்து மறுபடி நீரில் வைத்துவிடுகிறார்கள். அதாவது உலகியல் வாழ்வில் நம்மைப் போல் உடல் தாங்கி உண்டு உறங்கி இருந்தாலும் குச்சி வளைதல் மாயை என உணர்ந்து சாட்சி ரூபமாக வாழ்வை முடிக்கிறார்கள். அதனால் குளத்தில் அதாவது உலகியல் ரீதியில் வரும் இன்பதுன்ப அலைகளைப் பொருட்ப்படுத்துவதில்லை.
தியானத்தில் குச்சியை வெளியே எடுப்பதைப்போல மனதிலிருந்து தங்களை விடுவித்து ஆன்மாவில் ஒன்றி இருப்பதை சமாதி என்கிறோம். அதனால் தியானம் கலைத்தவுடன் பற்றற்று வாழ முடிகிறது. சில ஞானிகள் அவதாரங்கள் மட்டும் எப்போதும் மனதற்ற நிலையில் இருக்கிறார்கள். ரமணர்,பெரியவர்,விவேகானந்தர், சேஷாத்ரி ஸ்வாமிகள்…….
உடல்- நீச்சல் குளம்
நீர்-மனம்
குச்சி-பரமாத்மா
குச்சி வளைதல் – ஜீவாத்மா
குச்சி குட்டையாதல்,வளைதல்- ஜீவாத்மா தன்னை சக்தி குன்றிய ஆத்மாவாக பிழையாக உணர்தல்

புள்ளி வச்சா கோலம்!

நான் என்ற புள்ளி வைத்தால் கோலம் போட்டுவிடும் மாயை!
நான் என்ற புள்ளி நீ யை உருவாக்குகிறது. நான் நீ பிறப்பது வெளியில் இடைவெளியையும்(space) நேரத்தையும்(time) பிறக்கச் செய்கிறது. பலப்பல நான் நீக்களை இணைத்து மாயை போடும் கோலமே அண்ட சராசரம்! நான் என்ற புள்ளிகள் மறைந்தால் கோலமே இல்லை!

இறைவா ! இவற்றைத் தராதே!

அளவற்ற கல்வி,அதனால் வரும் அகம்பாவம்!
அளவற்ற புலமை,அதனால் வரும்
செருக்கு!
உயர்ந்த பதவி, அதனால் வரும்
ஆணவம்!
அளவற்ற ஆற்றல், அதனால் வரும்
வன்மம்!
அளவற்ற செல்வம்,அதனால் தரும்
கொடை!
அளவற்ற கொடை,அதனால் வரும்
சொர்க்கம்!
நீண்டகால சொர்க்கம்,அதனால் வரும்
பிறப்பு!
அளவற்ற பிறவி,அதனால் வரும்
வினைகள்!
……..
நிலையாமை உணர்த்து!
நல்வழியில் நிறுத்து!

இறைவனுக்கு நன்றி!

எனக்கு உலகில் சிறந்த அழகு,உடல் வலிமை,படிப்பு,பட்டம் ,பதவி,கலை,ஞானம் அனைத்தையும் அவன் தந்திருந்தால் எதையும் என்னால் ரசித்திருக்க முடியாது!

மணிக்கணக்கில் கண்ணாடி முன் அமர்ந்து என்னையே ரசித்து என்னையே நான் வியந்து என் ஆக்கங்களை நானே படித்து என்வலிமையை நானே மெச்சி….. இப்படி உப்புச் சப்பில்லாமல் கழிந்திருக்கும்!

இறைவன் கருணையாளன்! இவை எதையும் எனக்குத் தரவில்லை!

அதனால்
பிறரின்
பாடல்களை ரசிக்கிறேன்!
கவிதைகளை அனுபவிக்கிறேன்!
பேச்சாற்றலை வியக்கிறேன்!
இசையைச் சுவைக்கிறேன்!
செல்வத்தை வசதியான வாழ்க்கையை வாழ்த்துகிறேன்!

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என நுகர்ந்து அவனைத் தொழுது ” நீ தயாளன்! கருணைக் கடல்! உலகப் பொருட்கள் சாதனைகளில் சிக்காமல் காப்பாற்றினாய் ! ” என நன்றி கூறுகிறேன்!