செருப்பு என் குரு!

image

செருப்பு,கட் ஷூ,ஷூ!
செருப்பு அணிவது மிக எளிது. சட்டென்று காலை நுழைத்துவிடலாம்! ஓரளவே காலுக்கு பாதுகாப்பு! காலில் அடி படலாம்! மழையில் கால்கள் நனையும்!

கட் ஷூ அணிவது அதைவிடக் கடினம் . சில சமயங்களில் காலை கொஞ்சம் நன்றாக அழுத்தி நுழைக்க வேண்டும்.ஆனால் காலுக்கு ஓரளவு பாதுகாப்பு. அடிபடாது .ஆனால் கால்கள் மழையில் நனையும். விபத்து ஏற்பட்டால் கழன்று விழுந்துவிடும்.

ஷூ அணிவதோ கடினமான செயல். லேஸைத் தளர்த்தி காலை நுழைத்து மறுபடி லேஸை இறுக்கிக் கட்ட வேண்டும். அதுவும் இரண்டு காலுக்கும் தனி கவனம் தேவை!
ஆனால் விபத்துக்கள்,மழை நீர் இவற்றிலிருந்து முற்றிலும் பாதுகாக்கும்!

தீய பழக்கங்கள் செருப்பு போல!  அதனால் தான் நம்மால் அவற்றை விட முடியவில்லை. கடைப்பிடிப்பது மிக எளிது.ஆனால் நம் பல ப்ரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறோம்!

ஓரளவு நல்ல பழக்கங்கள் கட் ஷூ போல . ஓரளவு முயற்சி செய்தால் போதும்! கார் ஓட்டும் போது ஸிக்னல் குடுக்காமல் டர்ன் செய்வது. பார்க்கிங்கை விட்டுக் கொடுக்காமல் சண்டைக்கு நிற்பது. இப்படி சிறு முயற்சியால் திருத்த முடிந்த தீயபழக்கங்கள்!

மிக நல்ல ஒழுக்கங்கள் சீலங்கள் ஷூவை அணிவது போல. அஹிம்சை,தயை,கொடை,கருணை,வாய்மை,பிறன்மனை நோக்காமை ,புலால் தவிர்த்தல்,…. மிக மிக தளராத முயற்சி தேவை .பழகினால் இறைநிலை அடையலாம்!
இந்த உண்மை எனக்குத் தோன்றியபோது செருப்பாலடித்தது போல இருந்தது!
தீய பழக்கங்களை கடைப்பிடிக்க நினைக்கும் போது ” டேய்! செருப்பு வேணாம்! காலக் கடிக்கும்! ஷூவப் போடு!” என்று சொல்லிக் கொள்வேன்!😀😂

Leave a comment