உலகைப் பற்றிய நம் கவலை!

நொடி முள் நிமிட முள்ளைப் பார்த்துக் கேட்டது ” அண்ணே! ஏன் இவ்ளோ ஸ்லோவா போறீங்க?!”
” எனக்கும் அதே கேள்வி தம்பி! இவ்ளோ வேகமா ஓடுனா செத்துறுவியோன்னு பயமாயிருக்கு!” .
மணி முள் சொன்னது ” யாருலேய் தூங்கும் போது தொண தொணன்னு பேசி டிஸ்டர்ப் பண்றது?!”

அதைப் பார்த்த கடிகாரத்தின் ஓனர் பேட்டரியைக் கழற்றி வைத்துவிட்டான்! அவன்தாங்க கடவுள்! நாம அளவுக்கதிகமா கவலப்படுறோம்.

” நம்ம ரோல் எதுவோ அத செஞ்சிட்டு போய்னே இரு !” – கீதை

ஆன்மீகம்-32

வானவில்
=========
15 ஜூன் 2018

பாவ புண்ணியங்கள் ,பாவ புண்ணியங்களின் பதிவுகள் வினையுடலில் பதிவது, பாவ மன்னிப்பு  சாத்தியமா என்று பார்த்தோம்.
பாவ புண்ணியங்களின் பலனாக நாம் இன்பதுன்பங்களை அனுபவிக்கிறோம்.

1. துன்பங்கள் நீங்க பரிகாரங்கள் தேடுகிறோம்.

2. மகான்களை வணங்குகிறோம்.

3. கோவில் மசூதி தேவாலயம் என சுற்றுகிறோம்.

உண்மையிலேயே இவற்றிற்கு பலன் உண்டா?!

ஒவ்வொரு வினையையும் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற விதி என்னாவது?

வினைகளை யாராலும் மாற்றமுடியாது.ஆனால் அவற்றின் நிகழ்வு வரிசைகளை மாற்றி அமைக்கும் ஆற்றலும் பிறரின் வினைகளை தாங்கள் வாங்கிக் கொள்ளும் ஆற்றலும் மகான்களுக்கு உண்டு!

எடுத்துக்காட்டாக உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரை நாம் மருத்துவமனைக்குக் காரில் கொண்டு போகும்போது ரெயில்வே கேட் அடைபடுகிறது. ஒவ்வொரு நிமிட தாமதமும் ஆபத்து. வினை மருத்துவ சிகிச்சை நடைபெற்று உயிர்பிழைக்கும் வாய்ப்பை ரயில்வே கேட்டடைப்பின் மூலம் தடுக்கிறது.
அந்த கேட்டை காக்கும் பணியாளர் ” இந்த கேட்டை திறக்கமுடியாது .வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அடுத்த கேட்டிற்கு காரில் வேகமாகப் போங்கள்.நான் அடுத்த கேட்கீப்பருக்குச் சொல்லிவிட்டேன்!” என்கிறார். நாமும் விரைந்து சென்று அடுத்த கேட்டின் வழியாக கடந்து செல்கிறோம். உயிர் காக்கப்படுகிறது!
கேட்டடைபட்டது,இரயில் வேகமாக வரும் நிகழ்வு. இந்த இரண்டையும் மாற்ற இயலாது. ஆனால் அடுத்த கேட்டிற்குப் போங்கள் என யோசனை சொல்லி அதற்குத் துணை நிற்பதைப் போலவே மகான்கள் சித்தர்கள் விதியை மாற்றி அமைத்து நம்மை காக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களும் காக்க முடிவதில்லை.
காஞ்சிப் பெரியவர் பல முறை பலரை மரணத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார். சில முறை எவ்வளவு சென்று மன்றாடினாலும் மௌனமாக இருந்துவிடுவார்! “காலத்தில் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கமுடியாது! அகால மரணங்களை குருவருளால் இறையருளால் வெல்ல முடியும்!” என்பார்.

பல சமயங்களில் வரும் மரணங்களைத் தடுத்திருக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைத் தருகிறேன்.

பக்தர் ஒருவர் மிகவும் ஆசாரம் மிக்கவர் . வீட்டை விட்டு வெளியில் சாப்பிடமாட்டார். தண்ணீர் கூட குடிக்க மாட்டார். பெரியவரை தரிசித்துவிட்டு வீடு திரும்ப பெரியவரிடம் உத்தரவு பெற்றார். ” நீ வெளில எதுவுமே சாப்டமாட்ட. ஆனா நாக்கு வறண்டா சோடா சாப்டு பரவால்ல! பட்னியா இருக்காத!” என்று அன்பாக வழி அனுப்பினார். பக்தர் பஸ்ஸில் ஊருக்குப் போனார். வழியில் பஸ் ஓய்வுக்காக உணவிற்காக நின்றது. பக்தருக்கு நாக்கு வறண்டது. எதுவுமே சாப்பிடும் வழக்கமில்லாத பக்தரோ ” பெரியவர் சொல்லி இருக்கிறார்.சோடா குடிப்போம்!” என தன் மஞ்சப்பையை சீட்டில் வைத்துவிட்டு இறங்கி சோடா குடித்துவிட்டு வந்து பஸ்ஸில் ஏறினார். ஆனால் மஞ்சப்பையைக் காணவில்லை! ” யோவ் பெருசு! உன் மஞ்சப்பை அதோ அந்த சீட்டுல தூக்கிப்போட்டுட்டோம் ! அங்க உக்காந்துக்க!” என கிண்டல் செய்ய அவரும் மன வருத்தத்துடன் சோடா சாப்டுருக்கக் கூடாது என எண்ணிக் கொண்டு இடம் மாறி உட்க்கார்ந்தார்! சிறிது நேரங்கழித்து ஒரு பஸ் பக்கவாட்டில் மோத பக்தருக்கு முன் பின் இருந்த பகுதிகள் நொறுங்கி அதிலிருந்த பயணிகள் அங்கேயே இறந்து போனார்கள். இவர் மாறி உட்க்கார்ந்த சீட் தப்பித்தது!
இப்போது தான் புரிந்தது பெரியவர் பல வருடங்களாக நாம் பட்டினியாய் இருந்தும் அன்று சோடா குடிக்கச் சொன்னதின் சூக்சுமம்!

இன்னொரு முறை ஒரு பெண்மணி பெரியவரை வணங்கி ப்ரசாதம் வாங்கிக் கொண்டார். பெரியவரோ மிக ச்ரத்தையுடன் ஒரே ஒரு மரிக் கொழுந்தை ” பத்ரமா வச்சுக்கோ!” என்பதைப் போல கொடுத்தார். அந்தப் பெண்ணிற்கு ” நமக்கு மட்டும் ஏன் கொடுத்தார் ?!” என புரியவில்லை.
வீட்டில் பஸ்ஸில் போன பெண்ணின் பர்ஸ் களவு போய்விட்டது. எடுத்தது யாரென்று தெரியவில்லை. பின் திடீரென்று பக்கத்து சீட் பெண்ணின் மேலிருந்து பர்ஸ் கீழே விழுந்தது. அது தான் தொலைந்த பர்ஸ் என பெண்மணி கூவ பக்கத்து சீட் பெண்ணோ அது தனது என்றும் அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சரியாகச் சொன்னாள்! ( திருடிவிட்டு பணத்தை எண்ணியும் விட்டாள் அந்தப் பெண்!). கண்டக்டர் ” வேறு ஏதாவது அடையாளம் சொல்லுங்கம்மா!” என்று கேட்க்க ,தொலைத்த பெண்ணோ காஞ்சிப் பெரியவர் கொடுத்த மரிக் கொழுந்து இருப்பதாகச் சொன்னார்.  கண்டக்டர் அதை சரியெனச் சொல்லவே பக்கத்துச் சீட் பெண் திருடியதை ஒப்புக் கொண்டாள்!

இப்படி பல நிகழ்வுகள்! ஆம் பலரையும் பல விபத்துக்களிலிருந்து  மகான்கள் காத்தது உண்டு!

அடுத்தபதிவில் மகான்கள் வினைகளின் வரிசையை எப்படி மாற்றி நம்மைக் காக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்!
#ஆன்மீகம்
(தொடர்வோம்)

தண்ணீர்க் குடுவை என் குரு!

காற்றில் கலந்த ஈரப்பதம் ஆகிய நீர் கண்ணில் புலப்படுவதில்லை! குடுவையைத் திறந்து வைத்தால் காற்றும் தெரிவதில்லை அதில் உள்ள நீரும் தெரிவதில்லை!
குடுவையை மூடி வைத்தால் சொட்டுச் சொட்டாக நீர் துளிகள் தோன்றத் தொடங்குகின்றன! நீண்ட நேரம் மூடிவைத்தால் தண்ணீர் நிறையத் தொடங்குகிறது!

நீர்க்குடுவை – உடல்,உலகு
காற்றின் நீர்ப்பதம் – மறைந்திருக்கும் இறைவன்
குடுவையை மூடல் – புலன்வழிப்படாது மனதை நிலை நிறுத்தல் ,தியானம்

எந்தக் குடுவையிலும் நீர் சேர்தல் – சாதி,மத,இன,மொழி,பால்,நாடு,திணை இவற்றிற்கு அப்பாற்பட்டு எந்த உயிராலும் உயிரற்ற பொருளாலும் இறையுணர்வு பெறலாம்!

வெய்ட் எ மினிட்! ஹௌ கேன் ஸ்டோன் ஹேவ் காட் எக்ஸ்பீரியன்ஸ்?
இறையனுபவத்திற்கு புலன்கள் தேவையில்லை! இடையூறே!

அகலிகை கல்லாயிருந்து மனித உரு பெற்றது இதையே குறிக்கும். உயிரற்ற பொருட்களிலும் புலன்கள் உண்டு.உணர்வு உண்டு. அவற்றால் அதை வெளிக்காட்டமுடியாது .ஆனால் உணர்வு உண்டு. ஒரு எலக்ட்ரானிக் கருவியில் டிஸேபிள்டு ஃபீசர்ஸ் போல புலன்வழி இன்பதுன்பங்கள் தடை செய்யப்பட்டிருக்கும்!
இங்கே கோடிட்டுக் காட்டிச் செல்கிறேன் இதன் பின்னணியைக் கீழே!

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்”

எங்கும் உள்ளே இறைவனை உன்னுள் பார்க்க வழி செய்பவையே மதங்கள் சடங்குகள் ! அதை உணராதவரை அவற்றால் எந்த பலனும் இல்லை!

வர்ணாஸ்ரமத்தின் பயன்!

நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மரபணுக்களை செறிவூட்டி வடிவமைத்தது வர்ணாஸ்ரமம்! அதன் அடிப்படையே புரியாத முட்டாள்கள் நாம்! யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் என்பது சீர்திருத்தமல்ல முட்டாள்த்தனம்! இன்று மேல்நாடுகளில் பலருக்கும் பல அலர்ஜி ,ஒவ்வாமை வர காரணம் கண்டபடி திருமணம் முடிப்பதே! மரபணுக்களை சீராக காப்பாற்றி சமூக நலத்திற்கு பயன்படுத்தியதே வர்ணாஸ்ரமம்! இதெல்லாம் அமைதியாக உட்க்கார்ந்து சிந்தித்தால் ஒழிய புரியாது! வாழ்க ஒழிக தவிர ஒன்றும் தெரியாத செம்மறியாட்டுக் கூட்டம் நாம்!
எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் மணக்கலாம் என்றால் விலங்குகளைப்போல் உடன் பிறந்தவர்களை தாயை ஏன் மணம் முடிப்பதில்லை! ஆம் மரபணு காப்பாற்ற! மனித குலம் அழியாதிருக்க!

வஞ்சிக்கப்பட்து அந்தணர்களே!

ஒரு சோதனைச் சாலைக்குள் குரங்கு நுழைந்து நாலு டெஸ்ட் ட்யூப்புகளில் உள்ள திரவங்களை மாற்றி மாற்றி ஊற்றி விளையாடியது! அதற்கு அது விளையாட்டு! அப்போது உள்ளே நுழைந்த ஆராய்ச்சியாளன் ” ஐயோ! ஐயோ! பல வருஷமா பிரிக்க முடியாத தனிமங்கள கஷ்டப்பட்டு பிரிச்சி வச்சிருந்தேனே! அற்புதமான கண்டுபிடிப்ப இப்படி ஆக்கிருச்சே!” என்றான். வர்ணாஸ்ரம் சத்வ,ரஜஸ்,தமஸ் என்ற அமைதி,ஆக்கும் சக்தி,அழிக்கும் சக்தி என்ற மனதின் குணங்களை இவற்றை சரியான விகிதத்தில் கலந்து அந்தண,சத்திரிய,வைஸ்ய,சூத்திர என்று சமுதாய நன்மைக்காக படைத்தார்கள். முதல் மூன்று சாதியினருக்கும் பலப்பல கட்டுப்பாட்டை விதித்தார்கள். நான்காவது சாதியினருக்கு கட்டுப்பாடு விதிக்காததன் காரணம் கடினமான உடல் உழைப்பு செய்பவர்களை மூவேளை பூஜை செய்,மாமிசம் சாப்பிடாதே,மது அருந்தாதே என்ற நடைமுறைக்கு ஒவ்வாத கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு கொடுத்தார்கள். இழிவுபடுத்த இல்லை!
உண்மையில் வஞ்சிக்கப்பட்டது அந்தணர்களே! ஒரு நாளில் 12 மணி நேரம் இறைவழிபாடு செய்யவேண்டும்! சொத்து சேர்க்கக் கூடாது! தானம் வாங்கியே வாழவேண்டும்! 15 வருடங்கள் வேதம் கற்க வேண்டும். மற்ற தொழில் செய்யக் கூடாது.100% அஹிம்சை கடைப்பிடக்க வேண்டும். வாளேந்தக் கூடாது! இதைவிட டாப் ,வேதம் படித்து முடிக்கும் வரை பிச்சை எடுத்தே உண்ணவேண்டும்! இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது! இது அசிங்கம் அல்ல! படிக்கப்படிக்க மமதை வரக் கூடாது என்பதற்காக பிச்சை உணவு ! எனக்கு இது மிகவும் பிடித்த விஷயம். படிப்பவனின் ஈகோ கண்ட்ரோல்! நாவடக்கம்,பணிவு, பொறுமை அனைத்தையும் கற்றுத்தரும் முறை!

இதையெல்லாம் தெரியாமல் ” அர்ச்சனைத் தட்டில் சில்லறை பொறுக்குபவர்கள் அந்தணர்கள் !” என இந்துக்களே சொல்வது தலை குனிய வேண்டிய விஷயம்.
அவர்கள் பணம் சேர்க்கக் கூடாதென்ற கட்டுப்பாடு காரணம்.

இப்போது ஆங்கிலக் கல்விக்கும் வர்ணாஸ்ரமத்திற்கும் நடுவில் இருதலைக் கொள்ளி எறும்பாய் இந்தியா தவிக்கிறது!

இந்துக்கள் பூணல் அணியுங்கள்!

இந்துக்களில் ப்ராம்மண,க்ஷத்ரிய,வைஸ்யர்கள் 8,12,16 ஆம் வயதில் பூணல் அணியும் பழக்கம் இருந்தது.
சூத்திரர்கள் மிகவும் கடுமையான உழைப்பாளிகள் ( உழவு போன்ற இன்றியமையாத பணிகளில் ஈடுபடுவோரை வழிபாட்டிற்கு நேரம் ஒதுக்கச் சொன்னால் அவர்களுக்கு வேலை பாதிக்கும்) என்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 

இன்றைய சூழலில் அவர்களும் பூணல் அணிந்து பங்கேற்கலாம்.
அதனால் பூணல் என்பது அந்தணர்களுக்கு மட்டும் அல்ல என்று உணரவேண்டும் .
மேலும் பூணல் அணிந்ததும் செய்யவேண்டிய மூவேளை வழிபாடான காலை,மதியம்,மாலை சந்த்யா வழிபாடு காயத்ரி மந்திரம் சொல்லி நீரூற்றிச் செய்யும் கடமை தவறாது செய்யவேண்டும்!
ராமனும் (சத்திரியன்) க்ருஷ்ணன்(யாதவன்) இருவரும் பூணல் அணிந்து காயத்ரி மந்திரம் ஜபித்து வழிபட்டவர்களே!

நாம் திருமதி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் குரலில் கேட்கும் வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் வரிகளின் பொருள்:

கோசலையின் நல்ல வாரிசான ராமா! காலை சந்த்யாவந்தனம் செய்யும் நேரம் வந்துவிட்டது .நித்திய வழிபாட்டுக் கடமையைச் செய்ய எழுந்து கொள்!” என விசுவாமித்திரர் எழுப்புவதான இராமாயண ஸ்லோகமே.

இந்துமதம் சாதிகளைப் பிரித்து உயர்வு தாழ்வை உண்டாக்க எதையும் செய்யவில்லை!
ஆங்கிலேயன் காலத்தில் வழக்கொழிந்துவிட்டது!
சிந்தனைகளை புதுப்பிப்போம் !புத்துணர்வு பெறுவோம்!

ஆயிரம் உண்டிங்கு சாதி!
அதில் அந்நியர்(குறுகிய நோக்குள்ள அரசியல்வாதிகள்) வந்து புகல் என்ன நீதி?!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!
ஒற்றுமை நீங்கிடில்
அனைவர்க்கும் சாவே!

வந்தேமாதரம் என்போம் நம்பாரதத்தாயை
வணங்குதும் என்போம்!

சாதிகள் உண்டடி பாப்பா!
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

மாயை

மத இன குல சாதி மொழி திணை பால் தேச வேறுபாடுகளிலேயே நம்மை சிக்கவைத்து பரம்பொருளை அறியவிடாமற் செய்வதே மாயை!

இதை விவேகம் என்ற வாளால் அறுத்தெறிந்தால் மிஞ்சுவது நாம் கடவுள் என்ற அனுபவமே!

மேலே சொன்ன அனைத்து வேறுபாடுகளும் உடல் சார்ந்தவையே!

உடல் சார்ந்த எதுவும் நிலைலையில்லாததே!

அதனால் அதை கடப்பது எளிதே!

முடிசார்ந்த மன்னரும் பிடி சாம்பலாவர்!

சத்திரியன் வைஸ்யன் அந்தணன் இந்து கிறிஸ்தவன் இஸ்லாமியன் ஆண் பெண் வடக்கத்தான் தென்னகத்தான் இந்தியன் வெளிநாட்டவன்…. இப்படி நாம் அடித்துக் கொண்டு சாகும் வரை ஆன்மீகத்தில் ஒரு மயிரளவு கூட முன்னேற இயலாது எத்தனை கோடி பிறவி எடுத்தாலும்!

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்!

ஆசைகள்->பிறவிக்கு வித்து->பிறவி->இன்ப துன்பங்கள்->மேலும் ஆசைகள்->மரணம்->நிறைவேறா ஆசைகள்->பிறவி……

நம் ஆசைகள் துளித்துளியாக சேர்ந்து உருவானதே பிறவிப் பெருங்கடல்!
ஒரு பிறவியிலேயே நாம் டேங்கர் டேங்கராக ஆசைகளைக் கொட்டி பிறவிப் பெருங்கடலை ஆழமாக்குகிறோம்!
பின் நாமே “நீஞ்ச மிடீல! வாழ்வாடா இது?!” என அங்கலாய்க்கிறோம்!

பிறவிக்கடலை நீந்திக் கரைசேர முடியாது! வற்றவைக்க வேண்டும்! பின் ஆசைகளே இல்லாததால் பிறப்பிறப்பில்லாத நிலை அடையலாம். கடலே இல்லை என்றால் நீச்சலும் எதிர்நீச்சலும் முங்கு நீச்சலும் மூச்சு முட்டலும் இல்லை!
ஸிம்ப்ள்!

அது சரி! அதென்ன இறைவனடி சேராதார் நீந்துவர் நீந்தார்?!

ஆசைகள் குறைய இறைவனடி சேர்தல் முக்கியம்! வள்ளுவரே வழி சொல்கிறார்!
ஆசைகள் நம்மைப் பற்றுவதாலும்(பிடித்துக் கொள்வதால்) ஆசைகளை நாம் பற்றுவதாலும் ஆசைகள் இஸ் ஈக்வல்ட்டு பற்று!

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு

பற்றற்றான்=இறைவன்,துறவி

உலக பற்று(ஆசை) விட இறைவனை(துறவிகளை) பற்று(சத்சங்கம்,நல்லோர் தொடர்பு)!
ஆசை தானே குறையக் குறைய பிறவிக் கடல் ஆசைத் துளிகள் ஆவியாகிவிடும்! இதை பல பிறவிகளில் தொடர்ந்தால் விவேகம் வலுப்பட்டு அந்தப் பிறவியில் இளமையிலேயே இல்லறம் துறக்கும் மனநிலை ஏற்படும்!

கடல் இல்லை! உடல் (படகு) இல்லை! அலைகள் (இன்ப துன்பங்கள்) இல்லை!

தேவைப்பட்டால் உலகில் திரும்பி அவதாரமாக (காஞ்சிப் பெரியவர்,பரமஹம்ஸர்,விவேகானந்தர்..)ஞானியாக(ஷீரடி பாபா,ராகவேந்திரர்,….)  வந்து ” தம்பி! நீங்க கிரிக்கெட் விளையாடுறீங்களே இந்த க்ரவ்ண்டுலதான் என் பிறவிப் பெருங்கடல் இருந்துச்சு!” என காட்டலாம் .

பி.கு. எல்லா மதங்கள் மூலமாகவும் பிறவிக் கடல் வற்றும்! பிற மத அருளாளர்களை (இயேசு,நபிகள்,நானக்,புத்தர்,மகாவீரர்,….) பல ஆயிரம் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை!

ஆன்மீகம்-30

வானவில்
=========
2 ஜூன் 2018
பாவ மன்னிப்பு சாத்தியமா?

பாவம் அல்லது புண்ணியம் = கர்மவினை
யென்று பார்த்தோம்
மேலும்
செயல்+நல்லெண்ணம்=புண்ணியம்
புண்ணியம் – தன்னலம் = பற்றாத வினை
அதாவது பலன் கருதா(பயன்தூக்கா)  செயல்வினை ஆகாது.

ஒரு சிறு விளக்கம்:
=================
1.பயன்தூக்கா செயல்:
===================

பயன்தூக்கா=நிஷ்காம்ய
செயல்=கர்மம்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது

நன்மை கடலிற் பெரிது ! என்னவென்றால் பிறப்பிறப்பில்லா நிலை கடலைவிட பெரியது தானே!

2.பயன் தூக்கிய செயல்:
====================
பயன்தூக்கிய=காம்ய
செயல்=கர்மம்
1.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால் – அவ்வை

அடுத்தவர்க்கு உதவிவிட்டு என்று அதன் பயன் நமக்குக் கிடைக்குமோ என அஞ்சாதே. வேரில் ஊற்றிய உப்புநீர் இளநீராக நிச்சயம் திரும்பி வரும்! இது காம்ய கர்மம்!

2.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

தீயவர்க்கு செய்த உதவியால் நீ பலனை எதிர்பார்த்தாலும் நல்வினை ஏற்படாது. ஏனென்றால் தீயவரால் நல்வினைகள் செய்யப்பட மாட்டாது!
தேவர னையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழு கலான்
தீயவருக்கு செய்த பயனாக நல்வினை ஏற்பட வாய்ப்பில்லை.தீவினை ஏற்பட வாய்ப்புண்டு!

பாவத்தை எப்படி அழிப்பது?
எழுதப்பட்ட எதுவும் அழிக்கப்படும் தன்மை உடையது.
ஒரு வினையை அழிப்பதற்கு அதன் எதிர் வினை போதுமானது.
தீவினை= வினை+தீய எண்ணம் (1)
தீவினை+நல்வினை= வினை+தீய எண்ணம்+வினை+நல்லெண்ணம்
  = வினை+வினை  (2)
தீவினை= -நல்வினை அதாவது மைனஸ் நல்வினை

அதனால் வினைமட்டுமே மிஞ்சும் பாவ புண்ணியம் கழிந்துவிடும்!

பாவமன்னிப்பு இந்த அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது.மன்னிப்புக் கேட்டதும் மனது ஒரு நற்செயலைச் செய்யும் மன நிலை அடைகிறது.

பரிகாரங்கள் இவ்வாறே வடிவமைக்கப்பட்டன. கஞ்சத்தனத்தால் பொய் பித்தலாட்ங்களால் வந்தவினையை நமது ஜாதகம் மூலமாகவோ அல்லது மகான்களின் ஞானத்ருஷ்டி மூலமாகவோ அறிந்து அதற்கான எதிர்வினையாக தானதர்மங்களை மன்னிப்பு கேட்டுத் திருந்தும் எண்ணத்தோடு செய்தால் பாவங்கள் மறையும்!

எடுத்துக்காட்டாக வங்காளத்தைச் சேர்ந்த பெரிய கோடீஸ்வரருக்கு வாயால் உணவு உண்ணமுடியாத வியாதி! உணவை வயிற்றில் வைக்கப்பட்ட துளைவழியாக வேளாவேளைக்கு ஊற்றவேண்டும்! எதையும் சுவைக்க முடியாது.
காஞ்சிப் பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டு மடத்தைச் சார்ந்த தன் நண்பரிடம் பலமுறை மன்றாடி பெரியவரிடம் அழைத்துச் செல்லச் சொன்னார்.  பலமுறை முயன்று பெரியவர் தரிசனம் கிடைக்க தன் நிலையைச் சொல்லி அழுதார்!
“நான் என்ன செய்ய முடியும்?! நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். பதினெட்டு புராணங்களையும் தொகுத்து அச்சடித்து பலருக்கும் விநியோகம் செய்யுங்கள்!” என்றார். அதைப்போலவே அந்த பணக்காரரும் பலவருடங்கள் முயன்று தொகுத்து அச்சிட்டு வெளியிட்டார். வெளியிட்ட ஓரிரு தினங்களில் ஏதோ நினைவின்றி தாகத்தில் தண்ணீரைக் குடித்துவிட்டார்! அடடா! இது உயிருக்கு ஆபத்தில்லையா? என பதறினார். ஆனால் தண்ணீர் உள்ளிறங்கியது. ஒரு ப்ரச்சனையும் இல்லாமல் உணவும் இறங்கியது ! பெரியவரிடம் ஓடோடி வந்து கதறி அழுது நன்றி  கூறினார்.
இதனால் நாம் அறிவது என்னவென்றால் அந்த பணக்காரர் முன் பிறவியில் புராணங்களை இழிவு படுத்தியதின் விளைவாக வந்த வியாதியை மனம் நோகாமல் புரிய வைத்து தடுத்தாட்க் கொண்டார் பெரியவர்!

நல்வழிப்படுவோம்! நல்லோர் தொடர்பால் வினை களைவோம்!
(தொடரும்)
பி.கு. வேகவேகமாக பல தத்துவங்களை படபடவென்று சொல்லிச் செல்வதால் பயனில்லை! ஆழ அகல நுண்ணிய நோக்கு தேவை என்பதால் பாவ புண்ணியம் அவற்றை நீக்கும் வழிகளை பகிர்கிறேன்!
#ஆன்மீகம்