காலம்,நேரம் உண்டானது எப்படி?

உணர்வு,அறிவு,அழிவிலாமை என்ற தன்மைகள் கொண்ட ஒரு பொருளை எண்ணிக் கொள்ளுங்கள். அது தான் “பரம்”பொருள்.
நாம் அறிந்த மற்ற அனைத்தும் “வெறும்”பொருள். ஏனென்றால் அவை அனைத்தும் அறிவு,உணர்வு அற்ற ஜடப் பொருள் மற்றும் அழியும் தன்மையுடையவை.

அப்படிப்பட்ட பரம்பொருள் எல்லாத்திசைகளிலும் நீக்கமற 360 டிகிரி நிறைந்துள்ளதாக நினைத்துக் கொள்ளுங்கள். நம் மனம் பெயர்  உருவம் நிறமற்ற பொருட்க்களை கற்பனை செய்யும் திறமற்றது.

நமது சிற்றறிவிற்கு விளங்கும் வகையில் நாம் அந்தப் பொருளை நீர் என்று கொண்டால் ஓரளவு எளிதாக இருக்கும்.
அதாவது ஒரு அலையற்ற பெருங்கடல் என மனதில் கொள்வோம்.

இன்னொன்றையும் நினைவில் கொள்ளவேண்டும். இந்த நீர் உணர்வும் அறிவும் உள்ள ஒரு விசித்திரப் பொருள்.
(தொடரும்)