டிஃபரன்ஸ் ஆஃப் ஒபினியன்!

பரம்பொருள் என்பது சூரியனைப் போல ஞானத்தின் அறிவின் அளவற்ற தொகுப்பு!

நாம் அனைவரும் காலம் என்ற பரப்பில் வளர்ந்த புற்கள்.

நம் மனம் அந்தப்புல்லின் நுனியில் தொங்கும் பனித்துளிகள்.

ஒவ்வொரு பனித்துளியின் அளவும் பரப்பளவும் வேறுபடும்.

அதற்குத் தகுந்த அளவு அது ஒளியை எதிரொளிக்கும் ஆற்றல் பெற்றது.

நம் மனம் எதிரொளிக்கும் பேரறிவின் ஒரு கூறே நம் கருத்துக்கள்.

பனித்துளியின் தூய்மை நம் உள்ளத் தூய்மை போன்றது.

இதில் சரி தவறு என்று எந்த எண்ணத்தையும் கருத்தையும் தீர்ப்பளிக்க முடியாது.

ஞானிகள் ஏரித் தண்ணீர் போல பரம்பொருளின் ஆற்றலை அறிவை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவர்கள்.

அவர்களுக்கு யாருடனும் சண்டை சச்சரவு கருத்து வேறுபாடுகள் இல்லாததன் காரணம் அதுவே!

எடுத்துக்காட்டு காஞ்சிப் பெரியவர்!

இம்புட்டுத்தான் மேட்டரு!

நம் உடலாகிய புல்லை காலமென்ற தோட்டக்காரன் அறுக்கும் போது மனம் அது வெளிப்படுத்திய கருத்து அனைத்தும் காணாமல் போய்விடும்.

தூய்மையான உள்ளங்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் மட்டும் காலத்தைத் தாண்டி நிற்கும்!

வாழ்க வளர்க பல்லாண்டு இறையருளால் வள நலங்களுடன்!

#எதிர்மறைகருத்துக்கள்

17மார்ச்2020