பஞ்சுமிட்டாய்க்காரன்!

தெருவிலே பஞ்சுமிட்டாய் வண்டி சத்தம் கேட்டது. எப்போதுமே பஞ்சுமிட்டாய் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒன்று. எனக்கோ வியப்பைத் தருவது!
பஞ்சுமிட்டாய்க்காரர் மரநிழலில் வண்டியை நிறுத்தினார். வண்டியை நோட்டம் விட்டேன்.
நாலைந்து கண்ணாடி ஜாடிகள். இவற்றில் சீனி ,சிவப்பு,பச்சை,ஊதா வண்ணங்கள். ஒரு சுழலும் மாவாட்டும் யந்திரம் போலவும் நடுவில் ஒரு சூடாக்கும் பல ஆயிரம் துளைகள் உள்ள பாத்திரம்.
அவர் பாத்திரத்தைச் சூடாக்க நெருப்பைப் பற்றவைத்து இயந்திரத்தைச் சுழலவிட்டார். பின் ஓரளவு சூடேறியவுடன் ஒரு ஸ்பூன் சக்கரையை அதன் நடுவில் போட வெண்மேகம் போல மிட்டாய் வெளிப்படத் தொடங்க அதை குச்சியில் சுழற்றிப் பிடித்தார். வெள்ளை வெளேரென்று பஞ்சுமிட்டாய் ரெடி! பின் ஒவ்வொரு நிற பொடியையும் சீனியையும் போட்டு தனித்தனி வண்ணமாக கலவையாக இப்படி பஞ்சுமிட்டாய்களைச் செய்து பலப்பல விலங்குகள் பூக்கள் வடிவங்களில் உருமாற்றம் செய்து பைகளில் மூடிவைத்தார். பள்ளிக்கு நேரமாகவே ஓடிவிட்டேன்.
மாலையில் பள்ளி முடிந்து வீடுபோகும் வழியில் அவர் செய்த பஞ்சுமிட்டாய்கள் விற்றுவிட்டனவா என்று பார்த்தேன்.
ஓரிரண்டு விற்காமல் இருந்தன.அவரது அருகில் சென்று ” அண்ணே, விக்காத மிட்டாய என்ன பண்ணுவீங்க? !” என்று கேட்டேன்.
இருந்த மிட்டாய்களை அத்தனையையும் சுருட்டி வாயில் போட்டுக் கொண்டார்!
” எல்லாம் அஞ்சு ஸ்பூன் சீனிதாந்தம்பி!” என்றார்.

பஞ்சுமிட்டாய்க்காரன் – இறைவன்
சீனி – ப்ரம்மம் என்ற சச்சிதானந்த மூலப் பொருள்
சிவப்பு,பச்சை,ஊதா நிறங்கள் – சத்வ,ரஜோ,தமோ குணங்கள்
சூடும்,சுழற்சியும் – இயங்கு சக்தி,படைப்பு
பலப்பல துளைகள் – 84 இலட்ச யோனிகள்,உயிர்வகைகள்
விற்பது – வாழ்க்கை நிகழ்வுகள்
விற்காததைச் சாப்பிடுவது – ப்ரளயம்,உலகம் அழிதல்

பஞ்சுமிட்டாய்க்காரன்