மனதின் அறிதிறன்(mind’s ability)

நிலையான அறிவும் உணர்வும் உள்ள பொருள்னு (சத்-நிலையான சித்-அறிவும் ஆனந்தம்-உணர்வும்) சொன்னா உலகப் பொருள் எதையுமே உதாரணம் காட்டமுடியாது. நம்ம மனசுக்கு ஒரு சொல்லைக் கேட்டதும் அதற்கு உருவம் நிறம் கொடுத்து புரிந்து கொள்ளும். யானை என்றவுடன் அதன் உருவம் மனதுக்கு பளிச்சிடும்.  நாம கேட்க்காத பார்க்காத படிக்காத பொருள் எதையுமே நம்ம மனசால புரிஞ்சிக்க முடியாது. கெமிஸ்ட்ரி படிக்காத பாமரரிடம் அஸிட்டிக் ஆஸிட்னு சொன்னா தெரியாது. அது படிச்சவன் ethyl alcohol moleculeல் COOH ன்இடம் பெயர் வினை நடப்பதால்(substitution) உருவாவது என்று குத்து மதிப்பா புரிஞ்சிக்குவான்.