ஆங்கிலேயன் வைத்த அக்கினிக் குஞ்சு!

ஆங்கிலேயன் மாய வலை விரித்தது  முதலில் அந்தணர்களுக்கே!
1.சமஸ்க்ருத கல்வி ஒழித்தான்.
2.பாம்பாட்டிகள் என பரப்ப புத்தகங்கள் வெளியிட்டான்.
3.அந்தணர் வேதம் கற்பது குறைந்தது.
4. வேத சடங்கு வேள்விகள் வழிபாடு குறைந்தது
5. அந்தணர் விவசாய சொத்துக்கள் பறிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கு தவிக்க வைத்தான்
6. பிடிபட்ட காட்டு யானை பசி தாகத்தால் சொன்னபடி கேட்ப்பது போல அந்தணர்கள் ஆங்கிலக் கல்வி கற்றனர்.
7. வேதம், அந்தணர் சரிந்தனர்
8. பணம் பட்டம் ஆசையில் உயர்வு தாழ்வு கற்பித்தான்.
9. அந்தணர்களை முற்றிலும் தனிப்படுத்த ஆரிய திராவிட கற்பனைக் கதையை உருவாக்கி பரப்பினான். மக்கள் சமஸ்க்ருதம் மறந்ததால் உண்மை அறியாமல் திரித்துக் கூறப்பட்ட ஆங்கில நூல்களை வேதவாக்காக நம்பினர்.
10.வேதங்களை மொழி பெயர்ப்பதாக தாறுமாறாக மொழி பெயர்ப்பு செய்தான்.
11. இதற்கிடையில் வேதநெறியில் வாழ்ந்து எல்லா உயிரும் ஒன்று என்ற சிந்தனையுடன் இருந்த அந்தணர்கள் பட்டம் பதவி வந்ததும் தாங்கள் மற்றவரைவிட உயர்ந்தவர்கள் என நம்பத் தொடங்கினார்கள்.
12. சாதிக் கொடுமைகள் தொடங்கின. ஆரிய திராவிட பிளவு மேலும் சாதிகளைக் கூறு போட்டது
13. வேதவாழ்வு அழிந்தது. பகைமை கொழுந்துவிட்டு எரிகிறது
14. அரசியல் வாதி அதில் மானமின்றி குளிர்காய்கிறான்.
15. நாம் பார்ப்பான் ஒழிக என்கிறோம். பிரிட்டிஷ் காரன் போனதும் வேதவாழ்விற்கு அந்தணர்கள் மாறி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்க வேண்டும். ஆனால் பணம் பட்டம் அதிகாரம் அவ்வளவு எளிதில் விட மனம் வராது.
16. இதற்கிடையில் மொழிவாரி மாநிலம் இந்து முஸ்லீம் ப்ரச்சனை….. இப்படி பல சேர்ந்து கொண்டன.
17. நாலாம் வர்ணத்தை கோவிலில் விடாததைப் போன்ற அறிவற்ற செயல் எதுவும் இல்லை. கோவில்கள் உருவானதே அனைத்து இந்துக்களுக்கும்! அதிலும் அந்தணர்களுக்கு கோவில் போக வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் வீட்டில் மூன்று கால வழிபாடு செய்தாலே சித்தராக யோகியாக ஞானியாக வாழலாம்! அவ்வளவு கடுமையாக வழிபாடு செய்ய இயலாதவர்களுக்காகவே கோவில்கள் உருவாகின.இறை ஆற்றல் அனைவரையும் அடையவேண்டும் என்ற பரந்த நோக்கத்திலேயே . இதில் வேதம் கற்ற அந்தணர்கள் பணி முறையாக பூஜை செய்து அந்த கோவில்கள் அதிர்வுகளைத் தக்க வைக்கும் பொதுப்பணியே.
மற்றவரை அடக்கி ஆளவோ கோவில்களை உரிமை கொண்டாடவோ மற்றவரை உள்ளே வராமல் தடுக்கவோ இல்லை.
18. இந்த ஆலய அனுமதி மறுப்பு எந்த அடிப்படையில் என்பதே இதுவரை எனக்கு விளங்கவில்லை!
19. ஞான சம்பந்தர், ராமானுஜர்,……. இப்படி நாடெங்கிலும் ஆலய அனுமதி மறுப்பை எதிர்த்து நடவடிக்கை எடுத்தார்கள்.
20. திரு.ஈ.வெ.ரா. நாயக்கரும் நல்லவரே. சம்பந்தர்,இராமானுஜர் ,….. சொல்லியும் திருந்தாததால் அவர் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சொன்ன விதம் கடுமை. சொன்ன சொற்கள் கடுமை. கருத்து சரியே.
இதையும் யாரும் கேட்கவில்லை. அடுத்து வந்தது இறைமறுப்பு.
இறைமறுப்பு கலந்ததும் அவர் சொல்ல வந்த செய்தி சாதி அவலங்கள் பின்னுக்குத் தள்ளப்பட அந்தண இந்து மத எதிர்ப்பாய் தடம் புரண்டது.
21. இந்துமத கடவுள் மட்டும் இல்லை என்ற வாதம் சிறுபிள்ளை கூட ஏற்காது. அதனால் இன்றும் சாதியின் பெயரில் கொடுமை தொடர்கிறது. மேலும் தொடரும். ஏனென்றால் அதில் அரசியலின் அச்சு இணைந்து உள்ளது.
22. இதில் திரு.ஈ.வெ.ரா.வின் பிரிட்டிஷ் ஆதரிப்பு சுய ஒழுக்கக் குறைவு இந்துமத கடவுள்களை மட்டும் எதிர்த்தது அவரது உண்மையான கருத்துக்களை நீர்க்கச் செய்தது. இந்நிலையில் வழிபாடு கூடாது என்றவருக்கு அவரது கொழுந்துகள் சிலைவைத்து மாலையிட்டு பூஜை செய்தது அவரது கொள்கைகளை தெருவில் இட்டு உடைத்தது!
23. இன்றும் சாதிக் கொடுமை நடக்கிறது. அந்தண எதிர்ப்பு ஒரு நகைச்சுவையாக கொள்ளப்படுகிறது. அந்தணர்கள் அதை பெரிது படுத்துவதில்லை.நல்ல அந்தணர்களின் வெறுப்பையும் சம்பாதித்தாகிவிட்டது.

ஆங்கிலேயன் வைத்த வெறுப்பு என்ற அக்கினிக் குஞ்சு ! வெந்து தணிந்தது இந்தியா!
எய்த ஆங்கிலேயன் இருக்க அந்தணர்களை நோகிறோம்!
காஞ்சிப் பெரியவர் அருள்மொழியால் பலப்பல அந்தணர்கள் வேதவாழ்விற்கு திரும்பி வருகிறார்கள்.
வேதம் செழிக்கும். சாதிகள் தொடரும். உயர்வு தாழ்வு அழியும்.
இந்தியா தங்கத் தீபகற்பமாய் மீண்டும் ஒளிரும். இதற்கு சனாதனம் போதிக்கும் அறவாழ்க்கை வேண்டும்.  அதற்கு இந்துமதம் காப்பாற்றப்பட வேண்டும்!

வழிபாட்டில் சமஸ்க்ருதமா? தமிழா?

(எனக்கு நிறைய எழுத நேரமிருப்பதில்லை. அதனால் சுருக்கமாக எழுதுகிறேன். பலகருத்துக்கள் மிக ஆழமானவை. இருந்தாலும் ஒரு சில கருத்துக்கள் இங்கே!)

தவறான ப்ரச்சாரம் பல ஆண்டுகள் செய்யப்பட்டதால் அது உண்மை என்று உலவுகிறது. பரவாயில்லை.  தமிழ் நீச மொழி என்று விஜயேந்திரர் சொன்னாரா? காஞ்சிப் பெரியவர் சொன்னாரா? ஜெயேந்திரர் சொன்னாரா?
இன்றைக்கு கோவில்களில் மற்றும் தெருவெங்கும் திருப்பாவை திருவெம்பாவை முழங்குவது காஞ்சி சங்கர மடத்தின் மிகப் பெரிய முயற்சியால்!

அதைப்போல மந்திரம் என்பது இருவகைப்படும். ஒன்று ஒலிகளின் கோர்வை. மற்றொன்று அருளாளர்களின் அருள்வாக்கு.  சமஸ்க்ருத மந்திரங்கள் ஒலிக்கோர்வைகளாக முனிவர்களால் மிகவும் கவனமாக கண்டு நமக்கு தரப்பட்டவை.

தமிழில் உள்ள திருமுறைகள் தேவார திருவாசக திருப்புகழ் சஷ்டி கவசம் வரை ஒலிக் கோர்வை மற்றும் அருளாளர்களின் சக்தியை தாங்கி வருபவை.

இரண்டும் முக்கியம்.
திருவுருவங்கள் பேட்டரி போல. அதற்காக உள்ள அதிர்வுகளை உருவாக்கி சக்தியை சேகரித்து அனைவருக்கும் வழங்க உருவான சமஸ்க்ருதம் உபயோகப்படுகிறது. அதற்கு வழிவகுத்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால் சமஸ்க்ருதத்திற்கு  பதில் தமிழ் தமிழுக்கு பதில் சமஸ்க்ருதம் என்ற பேச்சே தவறு! 
இதெல்லாம் சட்டென்று சொன்னால் புரியாது. ஆராய்ந்து அறிய வேண்டும். அப்படி சொல்பவர்களை பார்ப்பனன் சொல்கிறான் என்று மறுத்தால் உண்மையை உணர்வது எப்போது?!

மந்திரம் என்பது மகான்கள் வாயிலிருந்து வரும் சொற்களே என்பது தொல்காப்பியம். 

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம்”
இது தான் மேட்டர்! நிறைமொழி மாந்தர் யார்? நாமறிந்த வள்ளுவர், பாரதி,பெரியவர், நாயன்மார்கள், ஆழ்வார்கள்,…… 
கந்த சஷ்டி கவசத்தில் 
ரரரரரர ரரரரரர ரரரரர
ரிரிரிரிரிரிரி
டகுடகுடகுடகு டங்கு டிங்குகு
செககண செககண செககண ….
இதெல்லாம் மந்திரங்களாய் ஆகிப்போகின்றது தாண்டவராய சுவாமிகளின்  தவவலியால்!

ஆலயவழிபாட்டில் இரண்டு பகுதிகள்.
ஆகமப்படி பூஜை சமஸ்க்ருத ஒலி அலைகளால்! அதை மேலும் மெருகேற்ற நிறைமொழி மாந்தர் பாடல்களான துதிகள்! இந்த அளவு புரிதல் இந்துக்களுக்கு தேவை!

ரரரரரர ரரரரர ரிரிரிரிரி 
லட்சுமியின் பீஜ மந்திரங்கள் செல்வம் வழங்கும். இதை புரிந்து சொன்னாலும் புரியாமல் சொன்னாலும் பயன் உண்டு.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் ….. பாடல் ருகரங்களால் வந்த இலட்சுமி பீஜ மந்திரம்! இதைச் சொன்னால் செல்வம் கொழிக்கும். சொன்னவர் காஞ்சிப் பெரியவர்!

இவற்றை ஆராய எனக்கும் உங்களுக்கும் ஞானம் கிடையாது! காஞ்சிப் பெரியவரும் மதமாற்ற சக்திகளால் அவமானம் அசிங்கப்படுத்தப்பட்டார்! அதில் இந்துக்கள் சைவ மடங்கள் வைணவ காழ்ப்பு அத்தனையும் காஞ்சிப் பெரியவர் மேலும் ஏவப்பட்டது வரலாறு.  இந்தத் தலைமுறைக்கு அது தெரியாததால் காஞ்சிப் பெரியவர் மட்டும் மதிப்பிற்குரியவர் என்றும் அவரது வெளிவந்தவர்கள் டம்மி என்ற மாயை உருவாகிவிட்டது!

இந்துக்கள் இதை உணராமல் தமிழ் த்ராவிடம் என்று நினைத்து செயல்பட்டால் மதம் மாற தயாராகுங்கள்.

கோவில் வெறும் தகுதியற்ற மதில் சுவராக டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறும்!