காலன்,காமம்,கடவுள்!

காலன் பற்றுவது உடலை காமம் பற்றுவது மனத்தை! காமம் இயங்குவது உடலால்! சித்தத்தை புருவமத்தியில் நிறுத்தினால் உடல் தளை அழிகிறது! அதனால் நாம் உடலைச் சார்ந்தவர்கள் அல்ல என்ற தெளிவு பிறக்கிறது! உடல் உணர்வற்ற போது உடல் உறவு பெரிதாகப் படுவதில்லை! இதைக் குறிக்கவே சிவபெருமான் மூன்றாம் கண்ணாகிய புருவமத்தியால் காமனை எரித்தான் என்று உருவகப்படுத்திச் சொல்லப் பட்டது! உடலின்பத்தை சனாதன தர்மம் என்றுமே பழித்ததில்லை. அதைச் சிற்றின்பம் என்றார்கள். அதைவிட மிகப் பெரிய இன்பம் நம் ஐம்புலன்களைத் தாண்டி உணர முடியும்.அதைப் பேரின்பம் என்றார்கள்! சிற்றின்பத்தை அனுபவி . ஆனால் அது நிலையற்றது என்பதை உணர்.

சிவனின் அடிமுடி காணல்!

நுண்ணிய மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்தாலும் அதைவிட நுட்ப்பமான துகள் உண்டு.

வின்னூர்தி கடக்கமுடியா தொலைவுகளும் உண்டு.

உள்நோக்கிப் பார்த்தால் அனைத்தையும் அறியலாம்.

இதைச் சொல்வதே விஷ்ணுவும்(சிவனின் அடியை பன்றியாக மாறிக் காணப்புறப்பட்டதாக,மைக்ராஸ்கோப் மூலம் நுண்பொருள் காணல்) ப்ரம்மனும்(சிவனின் முடிகாண அன்னமாகப் புறப்பட்டதாக ,வின்னூர்திவழி அண்டத்தின் எல்லை காணல்) அடிமுடி காணச் சென்றதாக உருவகப்படுத்தப்பட்டது.

இருவராலும் முடியாது தோல்வியை ஒப்புக் கொண்டனர். இதுதான் புராணங்கள் சொல்லும் குட்டிக் கதைகள்.  அதன் பொருள் புரியாமல் அதை முட்டாள்த்தனமான கதையென்று சொல்லும் நாமே அறிவிலிகள்!

இது நான் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிந்த கருத்து! இதைச் சிறுகதையாய் எழுதி இருந்தேன்.