சுட்ட சட்டி! சட்டுவம்!

ஆன்ம ஞானம் என்ற சோறு சமைக்க உடல் என்ற சட்டியில் மனம் என்ற சட்டுவம் தேவைப்பட்டாலும்  உடலாலும் மனதாலும் இறையனுபவத்தை உணர முடியாது.

சட்டியும்(உடல்) சட்டுவமும்(மனம்,புலன்கள்)
கறிச்சவை(அத்வைத நிலை) அறியா!

மதமாற்றம்!

எங்கள் கணக்கு ஆசிரியர் சொல்வார் ” உங்க அப்பனப்(சாரோட க்ளாஸ்மேட்) பாத்தேன். ரூமுக்கு ரூம் பல்ப மாத்துறியாம் படிக்கிறேன்னுட்டு! படிச்சாத் தாண்டா ஏறும்!”
மக்களும் காசு பணத்துக்காக மதத்தை மாற்றிக் கொள்கிறார்கள். பொருளாதாரம் மாறலாம். மன வக்கிரங்கள் முயன்றால் ஒழிய மாறாது!

இறைவன் தயாபரன்!

பாவ புண்ணியங்களுக்கும் இறைவனுக்கும் சம்பந்தமில்லை. சேற்றில் குழந்தை தாய் எவ்வளவு சொல்லியும் விளையாடுகிறது. பின் தாய் கதறக் கதற தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி தூய்மை செய்கிறாள். குழந்தைக்கு குளிக்க இஷ்டமில்லை. தாய் கருணையால் குளிப்பாட்டுகிறாள்! ” நாயே! எப்டியும் தொலை. சொன்னதக் கேக்காம !” என்று விடமாட்டாள். கடவுளும் நாம் அப்பிய பாவச் சேற்றை உலக அனுபவம் மூலம் நீக்குகிறான்! அவன் தயாபரன்!

ஆன்மீகம்-28

19 May 2018
வானவில்
=========
பாவ புண்ணியச் சுருக்கம்.
பாவமோ புண்ணியமோ ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு வினைக்கும் பலன் உண்டு.
தொடர்ந்து புண்ணியங்களை பலன் விரும்பிச் செய்தால் ஸ்வர்க்கமும் தொடர்ந்து பாவங்களை பலன் விரும்பிச் செய்தால் நரகமும் . பொதுவாக இரண்டும் கலந்து செய்வதால் பூவுலக வாழ்க்கை.
இந்த சொர்க்க நரகங்களை இப்போதைக்கு ஒதுக்கிவைப்போம்.
பூவுலக வாழ்க்கையில் நாம் அடையும் இன்பதுன்பங்களுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். அந்த காரணிகளை பாவ புண்ணியங்கள் எனக் கொள்வோம். அதுவும் ஒவ்வொருவரின் அனுபவமும் வேறுபடுகிறது. அதிலிருந்தே ஒவ்வொருவர் செய்த வினையும் வேறு வேறு என்றும் நாம் அறியலாம்.
அதாவது நல்வினையோ தீவினையோ அவரவர் செய்தவையே,பிறரால் வந்தவை அல்ல என ஊகிக்கலாம்.
இதையே,
“அவரவர் விதிவசம் அவரவர் அனுபவம்.”
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”
“என்ன கருமமோ?!”
“வினை விதைத்தவன் வினையறுப்பான்”
என்கிறோம்.

இந்த பாவ புண்ணியங்களின் விசைக்குட்பட்டு பிறப்பிறப்பும் ஏற்படுகிறது. நம் அனைவருக்கும் தெரிந்த புறநானூற்றுப் பாடல்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ’மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

—-புறம்.192, கனியன் பூங்குன்றன் ( பொருண்மொழிக் காஞ்சித் துறை)

பொருள்: பாவபுண்ணியங்கள் நம் வினையால் வருபவை. அவற்றால் இன்புற்று துன்புற்று மழை நீர் ஓட்டம் போல வாழ்க்கை ஆறு ஓடுகிறது. பின் அதே நீர் ஆவியாகி மறுபடி மழை நீராய் வருவதைப் போல பிறவிச் சுழலில் நாம் சிக்கிவிடுகிறோம்.
இதிலிருந்து விடுபட சிறியோரை இகழாமல் நம்மில் பெரியோரை(பணம்,பட்டம்,பதவியில் பெரியோரை) வியந்து அவர்களைப் போல ஆக ஆசைப்படாதிருந்தால் பிறப்பிறப்பற்ற நிலை அடையலாம்.

இந்த கருத்தையே பலப்பல வேதநூல்களும் நீதி நூல்களும் விளக்குகின்றன. விளக்க முயல்கின்றன.

பிறப்பிறப்பினைக் களைய தீவினை நல்வினைகளை எந்த சுயநலநோக்கமுமின்றி செயல்பட்டே நீக்க முடியும்.
மேலும் பல கேள்விகள் எழுகின்றன.

1.பாவபுண்ணியங்கள் அல்லது வினை ஒட்டாது செயலாற்றுவது எவ்வாறு?
2.பாவபுண்ணியங்கள் எங்கு பதியப்படுகின்றன?
3.உடலழிந்த பின்னும் மறுபிறவியில் தொடர்வதெப்படி?
4.பாவ மன்னிப்பு என்றால் என்ன?
5.பாவ புண்ணிய தொடரை வரிசை மாற்றி(sequence change) அமைக்க முடியுமா?
6. தெய்வ,சித்தர்,மகான்கள் வழிபாட்டால் பாவத்திலிருந்து விடுபட முடியுமா?
7. கிறித்தவ மதத்தில் பாவமன்னிப்பு என்ற முறை இருக்கிறதே? பிற மதங்களிலும் உண்டா?
8.ஒருவரின் பாவ புண்ணியத்தை மற்றவர் ஏற்க முடியுமா?
9.மகான்களுக்கும் உடல் உபாதைகள் நோய்கள் வருவது எவ்வாறு?
10. மகான்களை வசைபாடுவதால் சாபம் நேருமா?
11. பாவ புண்ணியங்களின் வகை எத்தனை?
( தொடரும்)
#ஆன்மீகம்

ஞானியின் நிலையென்ன?

கேள்வி கேட்ப்பவன் ஞானியல்ல! கேள்விகள் அடங்கியவன் ஞானி! ஞானமடைந்த பின் மற்றவரின் மேலுள்ள கருணையால் கேள்விகளுக்கு ஞானிகள் விடை தருவார்கள்.கேள்வி பதில்களால் தங்கள் மேன்மையை நிலைநாட்ட வேண்டிய எண்ணமோ அவசியமோ ஞானிகளுக்கில்லை! உலகளாவிய கருணையே ஞானியின் ஞானத்தின் அடையாளம்!

ஞானியின் நிலையென்ன?

கேள்வி கேட்ப்பவன் ஞானியல்ல! கேள்விகள் அடங்கியவன் ஞானி! ஞானமடைந்த பின் மற்றவரின் மேலுள்ள கருணையால் கேள்விகளுக்கு ஞானிகள் விடை தருவார்கள்.கேள்வி பதில்களால் தங்கள் மேன்மையை நிலைநாட்ட வேண்டிய எண்ணமோ அவசியமோ ஞானிகளுக்கில்லை! உலகளாவிய கருணையே ஞானியின் ஞானத்தின் அடையாளம்!

எந்தமதம் காரணம்?

காலையில்
இந்துவாய் பெண்ணைக் கற்பழித்துவிட்டு,
மதியம்
கிறித்தவனாய் மாறி கொலை செய்துவிட்டு,
மாலையில்
இஸ்லாமியனாக மாறி வங்கியில் கொள்ளை அடித்தால்
இவற்றிற்கு எந்த மதம் காரணம்?!

கரெக்ட்! மனம் தான் காரணம்!

ஆன்மீகம்-25

28 ஏப்ரல் 2018
வானவில்
=========
மூவுடல்கள் பற்றிப் பார்த்தோம்!

இவற்றில் ஐம்புலன்கள் என்ற சென்ஸர்கள்!

இந்த மூவுடல்களில் நாம் உணர்வது நனவு,உறக்கம்,கனவு,கனவற்ற நிலை!

இதில் மனம்,புத்தி,சித்தம்,அஹங்காரம் என்று பாகுபட்ட மனத்தின் இயக்கம்!

இவற்றால் சித்தத்தில் இருந்து கிளம்பும் ஆசை மற்றும் வெறுப்பு மனத்தில் தோன்ற புத்தி தடுத்தாலும் அஹங்காரம் அதைப் புறந்தள்ளி அனுபவி ராஜா அனுபவி என்று நம்மை நன்மை தீமைகளில் சிறைப்படுத்துவதே வாழ்க்கை!

இதில் பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம் மறுபிறவி!

இதில் கடவுள் நாம் உலகம்!

இதில் கடவுள் வேறா? நாம் வேறா?

நாமே கடவுளா?

இந்த உலகம் உருவானதெப்படி?

உலகம் இருந்தபடி இருக்க நாம் பிறந்திறப்பதேன்?

சொர்க்க நரகங்கள் நிலையானவையா?

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் உள்ள நிலையென்ன?

நன்மையும் தீமையும் கலந்த உலகில் கடவுளின் பங்கென்ன?

கடவுள் படைத்தவனென்றால்  தீமைகள் ஏன்?

கடவுள் சாட்சிப் பொருளென்றால் அதன் பொருளென்ன?

கடவுள் உருவனா? அருவனா?

நமக்கென்று தனிச் செயல்பாடு (free will) உண்டா?

பிறப்பிறப்பற்ற நிலை எதற்கு?

பிறந்திறப்பதால் என்ன நட்டம்?

மதங்கள் ஏன்? மறைநூல்கள் ஏன்?

மறைநூல்கள் இறைவன் தந்ததாகவே கூறப்படுகின்றனவே? இதை எப்படி நம்புவது?!

மந்திரங்கள் ஏன்?
#ஆன்மீகம்
#Spirituality

(தொடரும்)

சுப்ரபாதம் ஏன்?!

தூக்கமும் விழிப்புமில்லா இறைவனுக்கு ஏன் சுப்ரபாதம்?
அது இறைவனுக்காக அல்ல!
நாம் விலங்கு,மனிதன்,தெய்வம் இவற்றாலான கலவை!
நாம் இரவில் தூங்கி காலையில் விழித்தெழும்போது நம்மில் உள்ள விலங்கும்,மனிதனும் விழித்துக் கொள்கிறார்கள்!
நம்மிலுள்ள தெய்வம் தானே தினமும் விழிப்பதில்லை.
நாம் நம்மிலுள்ள இறைவனைத் தினமும் தட்டி எழுப்புவதே சுப்ரபாதம் அதாவது திருப்பள்ளியெழுச்சி!
நாம் சுப்ரபாதம் பாடும்போதும் கேட்க்கும் போதும் நம்மில் உள்ள இறைவன் விழித்துக் கொள்ள வேண்டும் என்ற மனத்தோடு ப்ரார்த்திப்போம்!

ஆன்மீகம்-26

வானவில்
========
5 May 2018

பாவ புண்ணியங்கள்
===================
இதை ஒரு சூத்திரமாக எளிதில் புரிந்து கொள்ளலாம்.

செயல் = பாவ புண்ணியம் இல்லை

செயல்+ஆசை= கர்மவினை
செயல்+கோபம்= கர்மவினை

செயல்+ஆசை+நல்ல நோக்கம்+சுயநலம் = புண்ணியம் = நல்வினை
செயல்+கோபம்+நல்ல நோக்கம்+சுயநலம்= புண்ணியம் = நல்வினை

செயல்+ஆசை+தீய நோக்கம்+சுயநலம் = பாவம் = தீவினை
செயல்+கோபம்+தீய நோக்கம்+சுயநலம் = பாவம்= தீவினை

புண்ணியங்கள் மட்டும் —>> சொர்க்கம்
பாவங்கள் மட்டும்  —>> நரகம்
பாவ,புண்ணியங்கள் —>> பூவுலக வாழ்க்கை

புண்ணியங்கள்—>>சொர்க்கம்–>>பூவுலக வாழ்க்கை ; மறுபடி மொதல்லருந்து!
பாவங்கள் —->>நரகம்—>>பூவுலக வாழ்க்கை;மறுபடி மொதல்லருந்து

செயல்+ஆசை+நல்ல நோக்கம்+பொதுநலம் = பாவபுண்ணியம் இல்லை –> பிறவியில்லை
செயல்+கோபம்+நல்ல நோக்கம்+பொதுநலம்= பாவபுண்ணியம் இல்லை—>> பிறவியில்லை

தன்நலம் கருதாது பலனை எதிர்பார்க்காது ஆசை,கோபம் பொருந்திய செயலானாலும் பாவபுண்ணிய வகைப்பாட்டில் அந்த செயல் அடங்காது. அதனால் பிறப்பிறப்பில்லா நிலை அடையலாம்!

நிறைய கருத்துக்களை சுருக்கமாகச் சொன்னால் குழப்பமாக இருக்கும். ஆனால் சூத்திரங்கள் உண்மை. நிரூபிக்கப் பட்டவை!
#ஆன்மீகம்
(தொடர்வோம்)