பசித்தவன் உணவைத் தேடுகிறான்!
களைத்தவன் உறக்கம் தேடுகிறான்!
இதை அடைந்தவன் காமம் தேடுகிறான்!
காமம் தீர்ந்தவன் கலையைத் தேடுகிறான்!
கலையில் சலித்தவன் கருவிகளைத் தேடுகிறான்!
கண்டுபிடிப்பில் சலித்தவன் தன்னைத் தேடுகிறான்!
தன்னைத் தேடுபவன் கடவுளைக் காண்கிறான்!
கடவுளைத் தேடுபவன் தன்னைக் காண்கிறான்!

தன்னைக் கண்டவன் தயையில் நிலைக்கிறான்!
கடவுளைக் கண்டவன் கடவுளாகிறான்!

சுப்ரபாதம் ஏன்?!

தூக்கமும் விழிப்புமில்லா இறைவனுக்கு ஏன் சுப்ரபாதம்?
அது இறைவனுக்காக அல்ல!
நாம் விலங்கு,மனிதன்,தெய்வம் இவற்றாலான கலவை!
நாம் இரவில் தூங்கி காலையில் விழித்தெழும்போது நம்மில் உள்ள விலங்கும்,மனிதனும் விழித்துக் கொள்கிறார்கள்!
நம்மிலுள்ள தெய்வம் தானே தினமும் விழிப்பதில்லை.
நாம் நம்மிலுள்ள இறைவனைத் தினமும் தட்டி எழுப்புவதே சுப்ரபாதம் அதாவது திருப்பள்ளியெழுச்சி!
நாம் சுப்ரபாதம் பாடும்போதும் கேட்க்கும் போதும் நம்மில் உள்ள இறைவன் விழித்துக் கொள்ள வேண்டும் என்ற மனத்தோடு ப்ரார்த்திப்போம்!