குச்சி என் குரு!

நீச்சல் குளத்தில் ஒரு நீளமான குச்சியை வைத்தால் அது வளைந்தும் குட்டையாகவும் தெரியும். அப்படியே தண்ணீரை வற்றச் செய்தால் குச்சி அதே அளவு நீளமாகவும் வளைவின்றி நேராகவும் இருப்பதைக் காணலாம். ரமணர்,காஞ்சிப் பெரியவர்,….போன்ற மகான்கள் குச்சியை வெளியே எடுத்துப் பார்த்துவிட்டு குச்சி மாறுபடாததை உணர்ந்து மறுபடி நீரில் வைத்துவிடுகிறார்கள். அதாவது உலகியல் வாழ்வில் நம்மைப் போல் உடல் தாங்கி உண்டு உறங்கி இருந்தாலும் குச்சி வளைதல் மாயை என உணர்ந்து சாட்சி ரூபமாக வாழ்வை முடிக்கிறார்கள். அதனால் குளத்தில் அதாவது உலகியல் ரீதியில் வரும் இன்பதுன்ப அலைகளைப் பொருட்ப்படுத்துவதில்லை.
தியானத்தில் குச்சியை வெளியே எடுப்பதைப்போல மனதிலிருந்து தங்களை விடுவித்து ஆன்மாவில் ஒன்றி இருப்பதை சமாதி என்கிறோம். அதனால் தியானம் கலைத்தவுடன் பற்றற்று வாழ முடிகிறது. சில ஞானிகள் அவதாரங்கள் மட்டும் எப்போதும் மனதற்ற நிலையில் இருக்கிறார்கள். ரமணர்,பெரியவர்,விவேகானந்தர், சேஷாத்ரி ஸ்வாமிகள்…….
உடல்- நீச்சல் குளம்
நீர்-மனம்
குச்சி-பரமாத்மா
குச்சி வளைதல் – ஜீவாத்மா
குச்சி குட்டையாதல்,வளைதல்- ஜீவாத்மா தன்னை சக்தி குன்றிய ஆத்மாவாக பிழையாக உணர்தல்