நாம் கடவுள்!

த்வைதம்,விசிஷ்டாத்வைதம் மனம் என்ற ஒன்று தனித்து உணரப்படும்போது ஏற்படும் காட்சிப் பிழைகள். அத்வைதம் மனம் அழிந்த உண்மை நிலையில் நாம் கடவுள் என உணர்தல்.
தண்ணீரில் முக்கிய குச்சி வளைந்ததாகத் தெரிவதும் குட்டையாகத் தெரிவதைப் போன்ற காட்சிப்பிழை! வெளியில் எடுத்தால் குச்சியின் நீளம் ஒரு இம்மி கூட மாறுவதில்லை. தண்ணீரின் ஒளி முறிவு எண் refractive index காற்றைவிட அதிகமாவதால் இந்த காட்சிப்பிழை ஏற்படுகிறது. மனம் அழியும் வரை இறைவன்-பக்தன் என இரட்டை நிலை! மனம் அழிந்தால் இறைவனே மிச்சம். இறைவன்-பக்தன் கிடையாது. மனம் நம் எண்ணங்களின் கோர்வை. எண்ணங்கள் ஆசை வெறுப்பால் வருபவை. ஆசை தொலைந்தால் மனம் இல்லை. நாம் கடவுள் என்ற நிலை. பிறப்பிறப்பு இல்லை.

ஆன்மீகம்-43

3 September 2018
வானவில்
======
42 வாரங்களாக நாம் ஆன்மீகம் பற்றி  அறிந்தது ,
உடல் சார்ந்த சாதி,மதம்,பால்,திணை,மொழி,நாடு பொருட்டல்ல!
மனவெளியில் உண்டாகும் விருப்பு, வெறுப்பு, பாசம்,… இப்படி எல்லா உணர்வுகளையும் தாண்டியது!
அறிவு உலகில் நாம் பெற்ற புகழ், பதவி,பட்டம்,……இப்படி எல்லா சாதனைகளையும் தாண்டியது!
அதாவது உடல்,மனம்,அறிவு என்ற மூன்றின் கோப்பாக நாம் அறிந்த “நாம்” என்ற உணர்வையும் அந்த நாம் என்ற தன்னுணர்வு என்ற ஈகோவால் நாம் அடைந்த சேர்த்த சேர்க்க முயலும் அணைத்தும் அழியும் அதாவது மாறும் தன்மை உடையது என்ற உண்மையை உணர்தல் ஆன்மீகத்தின் முதல்படி!
இதை திரும்பத் திரும்பச் சொல்வதன் நோக்கம் சரியான ஆன்மீகம் என்பதை உணராமல் பயனப்பட்டால் அழியும் உலக வாழ்வியலுக்கான மேன்மையும் கிடைக்காது! அழியாத ஆன்ம அனுபவமும் நேராது! நேர விரயமே ஏற்படும்!
சகதியில் சிக்கிய காரை எவ்வளவு வேகமாக ஓட்டினாலும் கார் வெளிக் கிளம்பாது! ஆனால் சகதி சுற்றி உள்ளோர் மீது தெளிப்பது உறுதி!
அதாவது நம் முட்டாள்த்தனத்தால் ஆன்மீகத்திற்கே இழுக்கை உண்டாக்கிவிடுவோம்!
இதை இன்றைய முன்னுரையாகக் கொள்ளவும்!
===========++++++++++========
(அளவோடு) கற்க ! நிற்க அதற்குத் தக !

இதுவே ஆன்மீகத்தின் தாரக( பிறவிக் கடலை கடக்கும்) மந்திரம்(கடவுச்சொல்)!  இதை என்றும் மறவாதீர்!

அளவோடு கற்றல் என்றால் என்ன?

வேத உபநிடத புராண இதிகாசங்கள் சாத்திரங்கள் பலப்பல மகான்கள் அருளாளர்கள் அருளிய அனுபூதி நூல்கள்! இவற்றை எல்லாம் அச்சிட்டு பக்கம் பக்கமாக அடுக்கினால் சந்திரமண்டலத்தையும் தாண்டும்! இதை மனப்பாடம் செய்வது எப்போது? பொருளை உணர்வது எப்போது?
தொட்டனைத்தூறும் இந்த மணற்கேணியான அறிவு நம்மை பலப்பல பிறவிகளில் அறிவுப் பகட்டைக் காட்டி வாதிட்டு அந்தப் பிறவிகளை வீணடிக்கச் செய்யும்! பீ கேர்ஃபுல்!
அதனால் கற்றதனால் ஆன பயன் என் கொல் “வாலறிவன்” நற்றாள் தொழாரெனின் என்றார் வள்ளுவர்!

அதனால் தான் ஓரிறைவன், ஒரு இறைத் தூதர், ஒரு புனித நூல் என வழிப்படுத்தி கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்த அறிவு எனும் புதைகுழிக்கும் அந்தக்குழிக்குள் நடக்கும்  அர்த்தமில்லா சண்டைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தன!
ஒருவகையில் மனிதன் காலப்போக்கில் ஈகோவை வைத்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டான். ஏதாவது தெய்வ இலக்கியம் என ஆரம்பித்து இறைசெய்தி சொல்லுவதுபோல ஆபாசங்களை உண்டாக்குவான் என்று கருதியே கலை இலக்கியங்களை ஹராம் என தடுத்தது! இது பிற்போக்கு எண்ணத்தில் அல்ல! தொலைநோக்கு! இன்றைய மத இலக்கிய அவலம் நாம் அறிவோம்!

இந்துமதத்தில் பல ஆயிரம் நூல்கள் பக்தி,ஞானம்,யோகம், சித்தாந்தம், … என லட்சக்கணக்கான ஆக்கங்கள் இறை தேடலின் டயரிகளாக செய்முறை விளக்க நூல்களாகக் கிடக்கின்றன! பலப்பல தெய்வ உருவகங்கள் உருவாயின!
தத்தம் மனநிலைக்குப் பிடித்த பிள்ளையார், முருகன்,சக்தி,… எனவும் இதில் ஏதோ ஒரு நூல் ஏதோ ஒரு தெய்வத்தை வழிபட்டு உய்யாமல் இந்த தெய்வம் அதைவிட சக்தி வாய்ந்தது! இந்த நூல் அதைவிட சிறந்தது என அடித்துக் கொண்டு சாகும் நிலையில் இந்துமதம்!
இதைத் தவிர்க்க உபநிடதங்களின் சாரமான பாமரனும் உய்ய பகவத்கீதை இந்துமதத்தின் ஒரு நூலாக உருவாகியது! அதிலும் த்வைதம்( கடவுளும் நீயும் வேறு), அத்வைதம்( நீயே கடவுள்!), விசிஷ்டாத்வைதம்( ஒரு சில பெரியோர்கள் மட்டும் கடவுளுடன் ஒன்றலாம்!) என வெவ்வேறு உரைகள் தோன்றின!
மனம் என்ற ஒன்று உள்ளவரை பல கருத்துக்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்!

அதனால் ஏதோ ஒரு தெய்வம் ஏதோ ஒரு கடவுளை வழிபட்டு உய்க!
ஆன்மீகம் என்ற பெயரில் வாதங்கள் கைகலப்புக்கள் சலசலப்புக்களைத் தவிர்த்து உய்க!
#ஆன்மீகம்
(தொடருவோம்)
பி.கு.
ஒரே ஒருமுறை சித்தி அற்புதங்கள் இவற்றைப் பற்றிய சிந்தனைகளை அடுத்த பதிவில் வேரறுத்துவிட்டு அன்றாட வாழ்வில் ஆன்மீகம் ஆரம்பிப்போம்! அப்போது உற்சாகம் களை கட்டும்!